சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை இடைநிறுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் பிறப்பித்த உத்தரவின் சட்டபூர்வதன்மையைச் சவால் செய்து, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், கறுவாத்தோட்டம் (Cinnamon Gardens) காவல் நிலையப் பொறுப்பதிகாரி, காவல்துறை மா அதிபர், சட்டமா அதிபர் மற்றும் கொழும்பு பிரதம நீதவான் ஆகியோரை பிரதிவாதிகளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிப்பேராணையை நாடியுள்ள கம்மன்பில
சத்தியாக்கிரகப் போராட்டத்தை இடைநிறுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி, மனுதாரர் ‘ரிட் ஒஃப் செர்ஷியோரரி’ (writ of certiorari) எனும் நீதிப்பேராணையை நாடியுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

