கிரெடிட் கார்டு விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் பொழுது ஒரு தனிநபரின் வருமான நிலைப்பாட்டை உறுதி செய்ய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழக்கமாக அவருடைய மாத வருமானத்தை கருத்தில் கொள்வது ஒரு தகுதி வரம்பாக அமைகிறது.
ஆனால் ஃப்ரீலான்சர்கள், மாணவர்கள், வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த தகுதி வரம்பு தொல்லை கொடுக்கக் கூடியதாக அமையலாம். இந்த ஒரு தகுதி வரம்பு காரணமாக பலரால் கிரெடிட் கார்டுகள் வாங்க முடியாத நிலை கூட ஏற்படலாம். ஆனால் உண்மையில் உங்களிடம் நிலையான வருமானம் இல்லாவிட்டாலும் கூட கிரெடிட் கார்டு பெறுவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அவை குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
உங்களுடைய ஃபிக்சட் டெபாசிட்களை அடமானமாக காட்டுவது
ஒருவேளை உங்களிடம் ஃபிக்சட் டெபாசிட் கணக்கு இருந்தால் கிரெடிட் கார்டு பெறுவதற்கு அதனை நீங்கள் அடமானமாக காண்பித்துக் கொள்ளலாம். உங்களுடைய ஃபிக்சட் டெபாசிட் தொகையில் 90 சதவீதம் உங்களுக்கு கிரெடிட் லிமிட் ஆக வழங்கப்படும். ஒருவேளை நீங்கள் கிரெடிட் கார்டு பில்களை செலுத்த தவறினால் அந்த பணம் உங்களுடைய நிலுவையில் உள்ள ஃபிக்சட் டெபாசிட் தொகையிலிருந்து எடுக்கப்படும்.
ஆட் ஆன் கார்டு
நீங்கள் கல்லூரி மாணவராக இருந்தால் பல்வேறு வங்கிகளில் கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை நீங்கள் பெறுவீர்கள். மாணவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளை பல வங்கிகள் வழங்கி வருகிறது. இதற்கு தகுதி பெறுவதற்கு மாணவர்கள் வழக்கமாக ஒரு நிதி, சொத்து அல்லது முதலீடுகளை வைத்திருக்க வேண்டும். கூடுதலாக குறிப்பிட்ட வங்கியில் போதுமான அளவு பேலன்ஸ் தொகையை பராமரித்து வரும் மாணவர்களுக்கு ஒரு சில வங்கிகள் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. எனவே பல்வேறு வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டு ஆஃபர்களை ஆராய்ந்து, ஒப்பிட்டு பார்த்து, தங்களுக்கு சிறந்த ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
செக்யூர்ட் கிரெடிட் கார்டு
முழு நேர வேலை இல்லாதவர்கள், சுயமாக தொழில் செய்து வருபவர்கள் அல்லது மாத வருமானம் இல்லாத வருமான மூலங்கள் பெற்றவர்கள் போன்றவர்களுக்கு இந்த பாதுகாக்கப்பட்ட கிரெடிட் கார்டு சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இந்த பாதுகாக்கப்பட்ட கிரெடிட் கார்டை பெறுவதற்கு ஒருவர் நிதிகளை அடமானமாக வழங்க வேண்டும். இந்த தொகையானது கிரெடிட் கார்டு செக்யூரிட்டி டெபாசிட் போல செயல்படுகிறது. ஒருவேளை நீங்கள் கிரெடிட் கார்டு பில்களை செலுத்த தவறினால் உங்களுடைய செக்யூரிட்டி டெபாசிட்டில் இருந்து பணம் கழிக்கப்படும்.
நம்பகத்தன்மையை அதிகரிப்பது
உங்களிடம் மாத வருமானம் இல்லாவிட்டாலும் கூட உங்கள் மீதான நம்பகத்தன்மையை நீங்கள் அதிகரித்து விட்டால் ஈசியாக கிரெடிட் கார்டை பெற்று விடலாம். நீங்கள் ஒரு கிரெடிட் கார்டு வாங்கினால் அதற்கான பில்களை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தி விடுவீர்கள் என்ற நம்பிக்கையை வங்கிகளுக்கு நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
வங்கி கணக்கு
ஒரு வங்கி கணக்கை நிலையான முறையில் நீங்கள் பராமரித்து வருகிறீர்கள் என்றால் அதுவே கிரெடிட் கார்டு பெறுவதற்கு போதுமான ஒரு தகுதியாக அமைகிறது.
உங்களுடைய வருமானங்களை வெளிப்படுத்துதல்
நீங்கள் ஃப்ரீலான்சிங் அல்லது வழக்கத்திற்கு மாறான வேலைகள் மூலமாக வருமானம் ஈட்டி வந்தாலோ அந்த மூலங்கள் என்ன என்பதை காட்டுவது அவசியம். இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அதிகரித்து எந்த ஒரு வழக்கமான வருமான சான்றிதழ் இல்லாமல் கிரெடிட் கார்டு பெறுவதற்கு உதவும். அதுமட்டுமல்லாமல் வாடகை, யுட்டிலிட்டி பில்கள் அல்லது போன் பில்கள் போன்ற கட்டணங்களை நீங்கள் தொடர்ச்சியாக செலுத்தி வருவதையும் ஒரு சில கிரெடிட் கார்டு வழங்குனர்கள் கருத்தில் கொள்வார்கள். இதன் மூலமாக உங்களுக்கு பொருளாதார பொறுப்பு இருப்பது நிரூபிக்கப்படுகிறது.
Also Read |
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!
சரியான நேரத்தில் பேமெண்ட்களை செலுத்துவது
முதலாவதாக உங்களுடைய பேமெண்ட் வரலாறு உங்களின் கிரெடிட் ஸ்கோரில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான நேரத்தில் நீங்கள் எல்லா விதமான பேமெண்ட்களையும் செலுத்தும் பொழுது உங்களுடைய கிரிடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும். இரண்டாவதாக பணத்தை சரியான முறையில் திருப்பி செலுத்தும் உங்களுடைய இந்த நடத்தை எதிர்காலத்தில் உங்களுடைய திருப்பி செலுத்தும் திறனை உறுதிப்படுத்த வங்கிகளுக்கு உதவுகிறது. எனவே நீங்கள் வேறு ஏதேனும் கடன்கள் வாங்கி இருந்தால் அதற்கான பேமெண்ட்களை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலமாக உங்களுடைய பொறுப்புணர்வை வங்கிகளுக்கு நீங்கள் வெளிப்படுத்தலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
