Last Updated:
ஜியோவை நம்பி முதலீடு செய்த லட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி என ரிலையன்ஸ் ரீடெய்ல் இயக்குநர் இஷா அம்பானி தெரிவித்தார்.
ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த டிஜிட்டல் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்டை, இந்தியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடும் நிகழ்ச்சி, மும்பையில் உள்ள தேசிய பங்குச்சந்தை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவர் ஆகாஷ் அம்பானி, “தொழில்நுட்பத்தை அனைவருக்கும் எளிய முறையில் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம்” தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய பங்குச்சந்தைகளில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தை பட்டியலிடும் நிகழ்ச்சியில் பேசிய அவர், விண்வெளி இணைப்பு முதல் செயற்கை நுண்ணறிவு வரை, அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியர்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்போம் என உறுதி அளித்தார்.
VIDEO | Mumbai: Dalal Street welcomes Jio Platforms as it makes market debut after a blockbuster IPO.
Reliance Industries non-executive director Isha Ambani says, “A few evenings ago, at our dinner table, my father, Mukesh Ambani, was reminiscing about his experiences in 1977. He was just 20 years old at the time and was working on Reliance’s first public offering. My grandfather, Dhirubhai Ambani, had decided to take Reliance to the people, not just to a handful of wealthy investors, but to ordinary people across the country. The company raised Rs 2.82 crore at a valuation of Rs 10 crore. My father smiled and said that he could never have imagined how far this journey would go with Shri Krishna’s blessings, or how proud my grandfather, Motapapa, would have been to witness it. Here is a man who has spent his entire life making the impossible possible, yet he still speaks about it with the wonder of someone experiencing it for the very first time. He continues to dream as though he is just getting started.”(Source: Jio YT)
(Full video available on PTI Videos – https://t.co/bIyFWTfmBd)
— Press Trust of India (@PTI_News) October 28, 2026
இந்நிலையில், 1977-ல் ரிலையன்ஸின் முதல் IPO நிகழ்வை முகேஷ் அம்பானி நினைவுகூர்ந்ததைச் சுட்டிக்காட்டி ரிலையன்ஸ் ரீடெய்ல் இயக்குநர் இஷா அம்பானி பெருமிதம் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், சாத்தியமற்றதைச் சாத்தியமாக்கும் தனது தந்தை, இன்றும் புதிதாகத் தொடங்குவது போலவே கனவு காண்பதாக நெகிழ்ச்சியுடன் இஷா கூறினார். அதேபோல் ஜியோவை நம்பி முதலீடு செய்த லட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் ரீடெய்ல் இயக்குநர் இஷா அம்பானி பேசுகையில், “என் தந்தை முகேஷ் அம்பானி 1977-ஆம் ஆண்டில் தான் பெற்ற அனுபவங்களை நினைவுகூர்ந்தார். அப்போது அவருக்கு வயது 20. அவர் ரிலையன்ஸின் முதல் பொதுப் பங்கு வெளியீட்டு (IPO) பணியில் ஈடுபட்டிருந்தார். என் தாத்தா திருபாய் அம்பானி, ரிலையன்ஸை வெறும் சில செல்வந்த முதலீட்டாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், நாடு முழுவதும் உள்ள சாதாரண மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்திருந்தார். அந்த நிறுவனம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2.82 கோடி ரூபாயைத் திரட்டியது. என் தந்தை புன்னகையுடன், ‘ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசியால் இந்த பயணம் இவ்வளவு தூரம் வரும் என்று நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. இதைப் பார்த்தால் என் தாத்தா எவ்வளவு பெருமைப்பட்டிருப்பார். சாத்தியமற்ற காரியங்களைச் சாத்தியமாக்குவதிலேயே தன் வாழ்நாளைக் கழித்த அவர், இன்றும் ஏதோ ஒரு விஷயத்தை முதன்முறையாக அனுபவிப்பவரைப் போன்ற வியப்புடன் இதைப் பற்றிப் பேசுகிறார். அவர் இன்னும் ஏதோ இப்போதுதான் தனது பயணத்தைத் தொடங்குவது போல கனவுகளைக் கண்டுகொண்டிருக்கிறார்.” என்று தனது தந்தை குறித்து பெருமிதமாக பேசினார்.


