மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற எல். முருகனுக்கு மீண்டும் தகவல், ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த முறையும் எல். முருகனுக்கு இதே துறை ஒதுக்கப்பட்டிருந்தது.
ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத் துறையும், அமித் ஷாவுக்கு உள் துறை பொறுப்பும் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு மின்சாரத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் செளஹானுக்கு வேளாண் துறை வழங்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

