• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஈரான் போர் முடிவுக்கு வரும்? இஸ்ரேல் எதிர்காலமே மாறும்.. நெதன்யாகு தோற்றால் என்ன நடக்கும்? | Netanyahu vs Eisenkot: Iran War Strategy Divides Israel Election, What is means for jewish nation

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஈரான் போர் முடிவுக்கு வரும்? இஸ்ரேல் எதிர்காலமே மாறும்.. நெதன்யாகு தோற்றால் என்ன நடக்கும்? | Netanyahu vs Eisenkot: Iran War Strategy Divides Israel Election, What is means for jewish nation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vigneshkumar

Time
Updated: Wednesday, October 28, 2026, 13:48 [IST]

டெல் அவிவ்: இஸ்ரேல் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், அவரை எதிர்த்து போட்டியிடும் கடி ஐசென்கோட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பும் ஆட்சியை கைப்பற்றுவதற்ற வாய்ப்பு இருக்கிறது. இருவரும் பாலஸ்தீனத்தை ஏற்கவில்லை என்றாலும் கூட ஈரான் போர் விவகாரத்தில் இருவரது நிலைப்பாடு வெவ்வேறாக இருக்கிறது. ஈரான் விவகாரததில் இருவரது மாறுபட்ட அணுகுமுறைகள் குறித்து நாம் பார்க்கலாம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக தொடரும் ஈரான் மோதல், இந்த தேர்தலின் முக்கிய விவாதங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தொடர்வதா அல்லது தாக்குதலை நிறுத்திவிட்டு பொருளாதார அழுத்தம், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதா என்பதே இரு தலைவர்களுக்கும் இடையே வெவ்வேறு அணுகுமுறை உள்ளது.

Netanyahu vs Eisenkot Iran War Israel Election

நெதன்யாகு

இஸ்ரேலில் அமைதியை ஏற்படுத்த வேண்டுமானால் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக இருக்கிறார். ஈரானால் எப்போது வேண்டும் என்றாலும் இஸ்ரேலுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை காட்டும் வகையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் டெல் அவிவ் நகரை அணுகுண்டு அழிப்பது போன்ற ஏஐ படத்தை அவர் பகிரந்திருந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் தனக்கு இருக்கும் நெருக்கமான உறவும், அமெரிக்காவின் ஆதரவும் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம் என்பது நெதன்யாகுவின் நிலைப்பாடு. இதற்கிடையே தேர்தலுக்கு முன்பாக ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்த வேண்டும் என்று நெதன்யாகு வலியுறுத்தியதாகவும் இது தேர்தலில் தனக்கு உதவக்கூடும் என நெதன்யாகு கருதியதாக அமெரிக்க செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.. ஆனால், ட்ரம்ப் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த செய்தியை நெதன்யாகுவின் அலுவலகம் மறுத்து, அது போலியான செய்தி என்று தெரிவித்துள்ளது.

ஐசென்கோட்

மறுபுறம் இஸ்ரேல் ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதியான கடி ஐசென்கோட், ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்கிறார். நெதன்யாகுவின் போர் அணுகுமுறையில் போதிய திட்டமிடல் இல்லை என சொல்லும் அவர், போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறார்.

கடந்த காலத்தில் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த ஐசென்கோட், தற்போது ஈரானை தோற்கடிக்க ராணுவத்தை விட பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதே சிறந்த வழி என்கிறார். புதிதாக போரை தொடங்குவதைவிட, பொருளாதார அழுத்தத்தின் மூலம் ஈரானை வீழ்த்த வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு! அதேநேரம் ஈரான் மீது எந்தவொரு தாக்குதலையும் நடத்தக்கூடாது என அவர் சொல்லவில்லை. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்காமல் இருக்க அதன் அணுசக்தி திட்டம் மீது தாக்குதல் நடத்த ஓகே சொல்லும் ஐசென்கோட், மீண்டும் முழு அளவிலான போரை தொடங்க மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

அமெரிக்கா உடனான உறவு

அமெரிக்காவுடனான உறவிலும் இரு தலைவர்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. அமெரிக்காவின் ஆதரவும் ட்ரம்புடனான தனது உறவும் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு முக்கியம் என்று நெதன்யாகு கருதுகிறார். ஆனால், எதிர்காலத்தில் அமெரிக்காவை முழுமையாக சார்ந்திருக்காமல் இஸ்ரேல் செயல்படுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று ஐசென்கோட் வலியுறுத்தி வருகிறார். இஸ்ரேல் தனது பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை முடிவுகளை சுயமாக எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது அவரது கருத்து.

என்ன நடக்கும்?

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய எக்ஸிட் போல்களில், கடும் போட்டி இருப்பது தெளிவாக தெரிகிறது. நெதன்யாகுவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றே தெரிகிறது. அதேநேரம் எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் ஆட்சியமைக்க தேவையான ஆதரவை பெறாது என்றே தெரிகிறது. இதர சிறு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்கான பேச்சுவார்த்தைகள் பல வாரங்கள் நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary

Israeli Prime Minister Benjamin Netanyahu and challenger Gadi Eisenkot differ over Iran(இஸ்ரேல் தேர்தலில் முடிவுக்கு வரும் ஈரான் போர்): Israel Election Netanyahu vs Eisenkot.

Read More

Previous Post

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞர் உயிரிழப்பு

Next Post

AI Bubble வெடிக்கத் துவங்கியது.. முதல் அடி சீனாவில்.. அப்போ அடுத்த அடி..? | Has the AI Bubble Started Bursting? China’s STAR 50 Wipes Out $480 Billion as Tech Stocks Collapse Global Markets!

Next Post
AI Bubble வெடிக்கத் துவங்கியது.. முதல் அடி சீனாவில்.. அப்போ அடுத்த அடி..? | Has the AI Bubble Started Bursting? China’s STAR 50 Wipes Out $480 Billion as Tech Stocks Collapse Global Markets!

AI Bubble வெடிக்கத் துவங்கியது.. முதல் அடி சீனாவில்.. அப்போ அடுத்த அடி..? | Has the AI Bubble Started Bursting? China’s STAR 50 Wipes Out $480 Billion as Tech Stocks Collapse Global Markets!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin