T20 உலகக் கோப்பை தொடரில் ஜூன் 9-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆடிய ஆட்டம் பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சோயிப் அக்பர் விரக்தியுடன் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். டாஸ் இழந்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை. ஆனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைமையை மதிக்கவில்லை. இதன் காரணமாக ஆரம்பத்தில் ரன் எடுத்தாலும் கூட,மிக விரைவாக விக்கெட்டுகளை இழந்தது.
பவர் பிளேயில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது. மேலும் 10 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 80 ரன்களுக்கு மேல் எடுத்தது. ஆனால் இறுதி கட்டத்தில் வெறும் 39 ரன்கள் எடுத்து 19 ஓவரில் ஆல் அவுட் ஆனது.

