• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டிவிஎஸ் குடும்ப சொத்து பிரச்சினை: நீதிமன்றம் சென்ற வேணு சீனிவாசனின் வாரிசுகள்.. அடுத்து என்ன? | TVS Family Dispute: Venu Srinivasan’s Children at Odds Over Assets as Both Sides File Caveats

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டிவிஎஸ் குடும்ப சொத்து பிரச்சினை: நீதிமன்றம் சென்ற வேணு சீனிவாசனின் வாரிசுகள்.. அடுத்து என்ன? | TVS Family Dispute: Venu Srinivasan’s Children at Odds Over Assets as Both Sides File Caveats
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிவிஎஸ் குடும்ப சொத்து பிரச்சினை: நீதிமன்றம் சென்ற வேணு சீனிவாசனின் வாரிசுகள்.. அடுத்து என்ன?

இந்தியாவின் புகழ்பெற்ற டிவிஎஸ் குழுமத்தின் தலைவரான வேணு சீனிவாசனின் குடும்பத்தில் வாரிசுரிமை மற்றும் சொத்துரிமை பிரச்சினை தீவிரம் அடைந்துள்ளது. வேணு சீனிவாசனின் மகள் மற்றும் மகன் தரப்பில் நீதிமன்றம் வரை இந்த பிரச்சினையை எடுத்து சென்றுள்ளனர்.

டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசனுக்கு சுதர்சன் வேணு மற்றும் லட்சுமி வேணு என ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். இந்த இருவருக்கும் இடையில் தான் சொத்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் தந்தை வேணு சீனிவாசன் மகன் சுதர்சனுக்கு ஆதரவாகவும் தாயார் மல்லிகா மகள் லட்சுமிக்கு ஆதரவாகவும் பிரிந்து நிற்கின்றனர்.

டிவிஎஸ் குடும்ப சொத்து பிரச்சினை: நீதிமன்றம் சென்ற வேணு சீனிவாசனின் வாரிசுகள்.. அடுத்து என்ன?

சொத்து விவகாரத்தில் வேணு சீனிவாசன் மற்றும் அவரது மகன் சுதர்சன் வேணு ஆகியோர், சில டிவிஎஸ் குழும நிறுவனங்களுடன் இணைந்து, மல்லிகா சீனிவாசன், லட்சுமி வேணு மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராக கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மறுபுறம், மல்லிகா – லட்சுமி தரப்பும் வேணு சீனிவாசன், அவரது மகன் மற்றும் சில முக்கிய டிவிஎஸ் நிறுவனங்களுக்கு எதிராக கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

சுமார் 10 நாட்களுக்கு முன்பு சிட்டி சிவில் கோர்ட், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி கூறுகிறது. அதாவது இருதரப்புமே தங்களின் வாதங்களை கேட்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என கூறி நீதிமன்றங்களில் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமம் டிவிஎஸ். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் குழுமத்தின் தலைவராக வேணு சீனிவாசன் இருக்கிறார். இவர் மகன் சுதர்சனுக்கு டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் பொறுப்பையும், அறக்கட்டளை கட்டமைப்புகள் மூலம் குறிப்பிடத்தக்க பயனாளி உரிமையாளராகவும் நியமித்துள்ளார். அதே வேளையில் குறைந்த மதிப்பு கொண்ட சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மகளுக்கு கொடுத்துள்ளார்.

சொத்து மற்றும் நிர்வாக பிரிப்பில் பாகுபாடு இருப்பதாக கூறி லட்சுமி வேணு, தனக்கான உரிமைகளை தர வேண்டும் என கோரி வருகிறார். குடும்ப சொத்துக்களை நியாயமான முறையில் பிரித்து கொள்வது குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளையும் அவர் நாடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் 2024 இல் வேணு சீனிவாசன் மகனும், மகளும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன் படி தான் நிர்வாகங்கள் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் இதில் வெறும் பொறுப்பை மட்டும் தந்துவிட்டு அதிகாரம் இல்லாத தலைவராக தன்னை வைத்திருக்கின்றனர் லட்சுமி வேணு சாடுகிறார். மேலும் இந்த ஒப்பந்தம் பல்வேறு வணிக பிரிவுகளில் டிவிஎஸ் பிராண்டின் பயன்பாடு மற்றும் போட்டித் தடை ஒப்பந்தம் பற்றி மட்டுமே பேசுகிறது, சொத்துரிமை பற்றி பேசவில்லை என்கிறார்.

2024 ஒப்பந்தம் மதிப்பின் அடிப்படையில் குடும்ப சொத்துக்களை பிரிப்பது குறித்து எதையும் பேசவில்லை என்பதால் நியாயமான முறையில் சொத்து மற்றும் நிர்வாகத்தை சமமாக பிரித்து தர வேண்டும் என லட்சுமி வேணு கேட்கிறார். இது தொடர்பாக குடும்பத்திலேயே பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு எட்டப்படாமல் இப்போது நீதிமன்றம் வரை வந்து நிற்கிறது.

Share This Article

English summary

TVS Family Dispute: Venu Srinivasan’s Children at Odds Over Assets as Both Sides File Caveats

டிவிஎஸ் குடும்ப சொத்து பிரச்சினை: நீதிமன்றம் சென்ற வேணு சீனிவாசனின் வாரிசுகள்.. அடுத்து என்ன?/ A reported disagreement over succession, ownership and management within Venu Srinivasan’s family has led both sides to file caveat petitions before courts and the National Company Law Tribunal.

Story first published: Wednesday, October 28, 2026, 8:12 [IST]

Other articles published on Oct 28, 2026

Read More

Previous Post

தீபாவளிக்கு முன் உருவாகும் ராஜயோகம்! இனி இந்த 4 ராசிகளுக்கு பணவரவு கொட்டும்! – Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin