• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இஸ்ரேல் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இஸ்ரேல் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேலில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.


கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கருத்துக் கணிப்புகளின்படி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட்டுக்கும் இடையில் பிரதமர் பதவிக்கான போட்டி மிக நெருக்கமாக உள்ளது.


எனினும், எந்தவொரு அரசியல் அணியும் அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 61 ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படவில்லை. இதனால், புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக பல வாரங்கள் அல்லது மாதங்கள் அரசியல் பேச்சுக்கள் நீடிக்கக்கூடும்.


ஜனநாயகம் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகிய விடயங்கள் இந்தத் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம்பிடித்துள்ளன. நெதன்யாகுவின் ஆட்சிக்கு மக்கள் வழங்கும் தீர்ப்பாகவும் இந்தத் தேர்தல் பரவலாகக் கருதப்படுகிறது.


வாக்குப்பதிவு நடைபெற்ற நாள் முழுவதும், அரபு வாக்காளர்களிடையே அதிக வாக்குப்பதிவு இடம்பெறுவதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்து நெதன்யாகு சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தார். இதனை அவசரநிலை என்றும், இஸ்ரேலிய வலதுசாரிகளுக்கு வாழ்வா, சாவா என்ற நிலை என்றும் அவர் வர்ணித்தார். அத்துடன், தனது ஆதரவாளர்கள் அனைவரும் வாக்களிக்க வருமாறும் அழைப்பு விடுத்தார்.


இரவு 10 மணிக்குப் பின்னரும் வாக்குப்பதிவைத் தொடர அனுமதிக்குமாறு கோரியுள்ளதாக நெதன்யாகுவின் லிகுட் கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், தேர்தலின் நேர்மையைச் சவாலுக்கு உட்படுத்தும் குற்றச்சாட்டுகளுக்கு அடித்தளம் அமைக்கும் முயற்சி இது என ஐசன்கோட்டின் தரப்பு விமர்சித்துள்ளது.


நாடு முழுவதும் உள்ள பல வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாக முன்னணி அரசியல் கட்சிகள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை முறைப்பாடுகளை முன்வைத்தன. எனினும், வாக்குச் சீட்டுகளில் திட்டமிட்ட வகையில் முறைகேடுகள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு தெரிவித்துள்ளது.


இஸ்ரேலின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை காரணமாக, அந்நாட்டில் அரசாங்கங்கள் கூட்டணி அடிப்படையிலேயே அமைக்கப்படுகின்றன. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டியில் எதிர்பாராத கூட்டணிகளும் உருவாகியுள்ளன. இந்தத் தேர்தல் மிகவும் நெருக்கமானதாகக் காணப்படுவதுடன், சில அரசியல் தரப்புகள் ஏற்கெனவே தங்களது கூட்டணி நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தியுள்ளன.


புதிதாக உருவாக்கப்பட்ட யாஷார் கட்சியின் தலைவரான ஐசன்கோட், நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்றுவதை இலக்காகக் கொண்ட பல்வேறு கட்சிகளின் கூட்டமைப்பான மாற்று அணியின் முக்கிய தலைவராக உள்ளார். கொள்கை ரீதியாக வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், நெதன்யாகுவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் இந்த அணியிலுள்ள கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. (a)




Read More

Previous Post

“மீசைய முறுக்கு 2” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…

Next Post

Israel Exit poll Results: ஆட்சியை இழக்கும் நெதன்யாகு? முந்தும் ஐசன்கோட்.. கடும் போட்டி! | Israel Election Exit polls suggest a rebuke of Netanyahu but no clear winner

Next Post
Israel Exit poll Results: ஆட்சியை இழக்கும் நெதன்யாகு? முந்தும் ஐசன்கோட்.. கடும் போட்டி! | Israel Election Exit polls suggest a rebuke of Netanyahu but no clear winner

Israel Exit poll Results: ஆட்சியை இழக்கும் நெதன்யாகு? முந்தும் ஐசன்கோட்.. கடும் போட்டி! | Israel Election Exit polls suggest a rebuke of Netanyahu but no clear winner

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin