Last Updated:
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிர்த்து காடி ஐசன்கோட் போட்டியிடுகிறார். ஈரான் போர் மற்றும் காஸா மோதல்களுக்கு மத்தியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஈரான் போர் மற்றும் காஸாவுடனான மோதலுக்கு மத்தியில் இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
இஸ்ரேலில் 120 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் லிகுட் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து யாஷார் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான காடி ஐசன்கோட் பிரதான வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
ஆட்சியை பிடிக்க 61 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் கருத்துக் கணிப்பில் யாஷார் கட்சி சார்பில் போட்டியிடும் காடி ஐசன்கோட்டுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவுடன் பெஞ்சமின் நெதன்யாகு களமிறங்கி உள்ளார். ஈரான் போர், காஸா உடனான மோதல் அதனால் உள்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சுணக்கம், அமைதியின்மை உள்ளிட்டவை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பாதகமாக பார்க்கப்படுகிறது.
பெஞ்சமின் நெதன்யாகு, காடி ஐசன்கோட் தவிர்த்து டுகெதர் கட்சியின் நப்தாலி பென்னட் , முன்னாள் பிரதமர் யாயிர் லபிட், ஜனநாயக கட்சியின் யாயிர் கோலன் உள்ளிட்டோரும் பிரதமர் ரேஸில் நீடிக்கின்றனர். தனிக்கட்சி பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி அரசு அமையும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 உறுப்பினர்களின் வெற்றியை உறுதி செய்யும் 12 லட்சம் பாலஸ்தீனிய மக்களின் வாக்கு எந்த கட்சிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


