• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஓசூர்-க்கு ஜாக்பாட்.. லட்டு மாதிரி வரும் முக்கிய முதலீடு..!! | Jackpot for Hosur: Ather Energy Announces ₹122 Crore EV Manufacturing Expansion to Boost Production to 11.45 Lakh Units!

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஓசூர்-க்கு ஜாக்பாட்.. லட்டு மாதிரி வரும் முக்கிய முதலீடு..!! | Jackpot for Hosur: Ather Energy Announces ₹122 Crore EV Manufacturing Expansion to Boost Production to 11.45 Lakh Units!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஓசூர்-க்கு ஜாக்பாட்.. லட்டு மாதிரி வரும் முக்கிய முதலீடு..!!

இந்திய EV இரு சக்கர வாகன சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், விலை என்பதை தாண்டி தரம் முக்கியம் என்பதை மக்கள் பார்க்க துவங்கியுள்ளனர். இதனால் தரத்தில் கோளாறு உள்ள பல இரு சக்கர EV வாகனங்கள் தற்போது வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் வேகமாக இழந்து வருகிறது.

இந்த நிலையில் டிவிஎஸ், ஏதர், ஹீரோ போன்ற பல நிறுவனங்கள் தனது உற்பத்தி அளவையும், தரத்தையும் மேம்படுத்த பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறது.

ஓசூர்-க்கு ஜாக்பாட்.. லட்டு மாதிரி வரும் முக்கிய முதலீடு..!!

இதன் ஒரு பகுதியாக ஏதர் எனர்ஜி தனத உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்துடன் சுமார் 122 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளது. ஏதர் எனர்ஜி தற்போது திட்டமிட்டு உள்ள முதலீட்டை 2 பிரிவுகளாக பிரித்து ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஓசூர் தொழிற்சாலையிலும், மற்றொரு பகுதியை மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்டப்பட்டு வரும் தொழிற்சாலையிலும் முதலீடு செய்ய உள்ளது.

இப்புதிய முதலீட்டின் மூலம் செய்யப்படும் உற்பத்தி விரிவாக்கம் மூலம் ஓசூர் தொழிற்சாலையில் வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கை 4.2 லட்சத்தில் இருந்து 4.95 லட்சம் வரையில் அதிகரிக்க உள்ளது.

இதேபோல் மகாராஷ்டிரா தொழிற்சாலையில் 5 லட்சத்தில் இருந்து 6.5 லட்சம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஏதர் நிறுவனத்தில் மொத்த வாகன உற்பத்தி அளவு 11.45 லட்சம் வாகனங்களாக அதிகரிக்க உள்ளது.

ஏதர் நிறுவனத்தின் அடுத்தடுத்து தயாரிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்றுப் பெற்று இருக்கும் வேளையில், இந்த விரிவாக்கம் மூலம் பெரிய வர்த்தக வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓசூர் தொழிற்சாலை தான் தற்போது ஏதர் நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்திற்கும் முதுகெலும்பாக உள்ளது, ஆனால் இத்தொழிற்சாலை தற்போது 98 சதவீத பயன்பாட்டு அளவில் இருக்கும் காரணத்தால் புதிய தொழிற்சாலை வட மாநிலத்தில் அமைக்க முடிவு செய்து இதற்கான பணிகளை செய்து வருகிறது.

மகாராஷ்டிராவில் தொழிற்சாலையில் வட இந்திய சந்தைக்கான சப்ளையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். இதேபோல் இந்நிறுவனத்தின் புதிய பேட்டரி உற்பத்தி தளம் 2028ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் நடைமுறைக்கு வரும் என கணித்துள்ளது ஏதர் நிறுவனம்.

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 122 கோடி ரூபாய் முதலீட்டில் 58 கோடி ரூபாயை ஓசூரிலும், 64 கோடி ரூபாயை மகாராஷ்டிர தொழிற்சாலையிலும் செய்ய உள்ளது ஏதர் நிர்வாகம்.

Share This Article

English summary

Jackpot for Hosur: Ather Energy Announces ₹122 Crore EV Manufacturing Expansion to Boost Production to 11.45 Lakh Units!

Jackpot for Hosur: Ather Energy Announces ₹122 Crore EV Manufacturing Expansion to Boost Production to 11.45 Lakh Units! — ஓசூர்-க்கு ஜாக்பாட்.. லட்டு மாதிரி வரும் முக்கிய முதலீடு..!!

Story first published: Tuesday, October 27, 2026, 15:25 [IST]

Other articles published on Oct 27, 2026

Read More

Previous Post

பிரதமர் பதவியை இழக்கும் பெஞ்சமின் நெதன்யாகு? இன்று இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல்! சர்வே சொல்வது என்ன? | Israel Election today: Can Benjamin Netanahu win again? who will win in this polls? details here

Next Post

மலேசியாவுடனான தொடர்புகள் குறித்து இந்தோனேசியக் காவல்துறை விசாரணை. – Malaysiakini

Next Post

மலேசியாவுடனான தொடர்புகள் குறித்து இந்தோனேசியக் காவல்துறை விசாரணை. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin