International
oi-Nantha Kumar R
டெஹ்ரான்: சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் பயந்துபோன சவுதி அரேபியா ‘மெக்கா’ ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான், துருக்கியை உதவுக்கு அழைத்தும் எந்த பலனும் இல்லை. இதனால் வேறு வழியின்றி சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 3 நாடுகளும் ஈரானிடம் சரணடைந்துள்ளன. ஹவுதிகளின் தாக்குதலை நிறுத்த உதவும்படி ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன.

இந்த பேச்சுவார்த்தையில் சவுதி அரேபியா சார்பில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தம்பியும், பாதுகாப்பு துறை அமைச்சருமான பகாலித் பின் சல்மான், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர், துருக்கி உளவுத்துறையின் தலைவர் இப்ராஹிம் காலின் ஆகியோர் ஈரானுக்கு சென்று உதவி கோரியுள்ளனர்.
இவர்கள் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஷின் ரெசாய் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்த சமயத்தில் சவுதி அரேபியா மீதான ஹவுதிகளின் தாக்குதலை நிறுத்த வேண்டும்.
ஹவுதிகளின் தாக்குதல் என்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தை பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். இதனால் ஹவுதிகளின் தாக்குதலை நிறுத்த உதவ வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு ஈரான் உதவி செய்வதாக கூறியுள்ளது.
சவுதி அரேபியாவுக்கும், ஏமனில் இருந்து செயல்பட்டு வரும் ஹவுதிகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதில் ஹவுதிகள் என்பவர்கள் ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஹவுதிகள் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், கச்சா எண்ணெய் வயல்கள், எண்ணெய் சுத்திரிகரிப்பு நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன. இதுவரை 20க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளதோடு, 350க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஹவுதிகளுக்கு பெரிய அளவில் பலம் இருக்காது. அவர்களை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று நினைத்த சவுதி அரேபியாவிற்கு இந்த தாக்குதல் பெரும் ஏமாற்றத்தை தந்தது. இதனால் வேறு வழியின்றி சவுதி அரேபியா ‘மெக்கா’ ஒப்பந்த்தத்தின் படி துருக்கி, பாகிஸ்தான் நாடுகளின் உதவியை கோரியது. இதில் பாகிஸ்தான் நேரடியாக தனது படை வீரர்களை சவுதி அரேபியாவிற்கு அனுப்பிய நிலையில் துருக்கி ராணுவ உதவிகளை வழங்கியது.
இருப்பினும் கூட சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இணைந்து சவுதி அரேபியா மீதான தாக்குதலை தடுத்து முடியவில்லை. இது சவுதி அரேபியாவிற்கு பெரிய பிரச்சனைாக மாறியது. இந்நிலையில் தான் வேறு வழியின்றி சவுதி அரேபியா, ஈரானிடம் சரணடைந்துள்ளது. ஈரான் – சவுதி அரேபியா இடையே சுமூகமான உறவு இல்லை. இருப்பினும் இந்த விவகாரத்தில் ஹவுதிகளை கட்டுப்படுத்த ஈரானால் தான் முடியும் என நினைத்து சவுதி அரேபியா தற்போது அந்த நாட்டிடம் சரணடைந்துள்ளது.
அதன்படி ‘மெக்கா’ ஒப்பந்த நாடுகளான சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஈரான் அதிபர், வெளியுறவுத்துறை அமைச்சர் உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஹவுதிகளின் தாக்குதலை நிறுத்த உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


