• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்க நகை கடன் வாங்கியிருக்கீங்களா..? முதல்ல இதை படிங்க..!! | Gold Loan: Why Falling Gold Prices Could Trigger Urgent Margin Calls and Auction Notices from Banks

GenevaTimes by GenevaTimes
October 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்க நகை கடன் வாங்கியிருக்கீங்களா..? முதல்ல இதை படிங்க..!! | Gold Loan: Why Falling Gold Prices Could Trigger Urgent Margin Calls and Auction Notices from Banks
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்க நகை கடன் வாங்கியிருக்கீங்களா..? முதல்ல இதை படிங்க..!!

சாமானிய, நடுத்தர மக்கள் மத்தியில் மட்டுமே முக்கிய நிதி திரட்டும் கருவியாக இருந்த தங்க நகை கடன், தங்கம் விலையில் ஏற்பட்ட உயர்வு மூலம் பெரும் பணக்காரர்களும் தங்களிடம் இருக்கும் தங்கத்தை வைத்து அதிகளவிலான கடனை வாங்குகின்றனர்.

இதன் விளைவாக தற்போது இந்திய வங்கி துறையில் தங்க நகை கடன் அளவு 5.52 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2 வருடத்தில் 4.4 மடங்கு உயர்ந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் NBFC-களிடம் 3.54 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை அளித்துள்ளது.

தங்க நகை கடன் வாங்கியிருக்கீங்களா..? முதல்ல இதை படிங்க..!!

இந்த நிலையில் தற்போது பிரச்சனை என்னவென்றால் தங்கம் விலை தொடர்ந்து உயரும் போது வங்கிகளுக்கும், NBFC-க்கும் கொண்டாட்டம் தான், ஆனால் விலை குறையும் போது பெரும் பாதிப்பு ஏற்படும். தங்கம் விலை ஜனவரி மாதம் உச்ச விலையில் இருந்து சுமார் 26 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

இதனால் நகை கடன் கொடுத்த அனைத்து நிறுவனங்களுக்கும் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. பொதுவாக வங்கிகள் தங்க நகை கடன் கொடுக்கும் போது தங்கத்தின் மதிப்பில் சுமார் 85 சதவீத மதிப்பிற்கும், அதிகப்படியாக 2.5 லட்சம் ரூபாய் வரையில் கடன் கொடுக்கிறது.

தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது மூலம் வங்கிகள் ஏற்கனவே கொடுத்த நகை கடன் மதிப்பு தற்போது 85 சதவீதத்தில் இருந்து 106 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது அடமானம் வைக்கப்பட்ட தங்கத்திற்கு கூடதலான தொகையை கடனாக கொடுத்துள்ளது.

இதனால் யாருக்கு பெரிய பாதிப்பு என்றால் தங்க நகை கடன் சந்தைக்குள் புதிதாக வந்தவர்கள் தான், குறிப்பாக தங்கம் விலை உயர்ந்த பின்பு இது பெரும் சந்தையாக மாறும் என கணித்து இத்துறைக்குள் நுழைந்த புதிய நிறுவனங்களுக்கு பெரும் நெருக்கடியாக அமையும்.

உதாரணமாக மூத்தூட், மணப்புரம் போன்ற நகை கடன் அமைப்புகள் தற்போது தன்னிடம் இருக்கும் மொத்த தங்கத்திற்கு வெறும் 57 சதவீதம் அளவிலான தங்கத்தை மட்டுமே கொடுத்துள்ளது. அதாவது 100 கிலோ தங்கத்திற்கு வெறும் 57 சதவீத தொகை மட்டுமே கடனாக கொடுத்துள்ளது.

இதற்கு காரணம் பல ஆண்டுகலாமாக இப்பிரிவில் வர்த்தகம் செய்யும் காரணத்தால் அதிகளவிலான தங்கத்தை விலை குறைவாக இருக்கும் போது பெற்றதன் மூலம் தற்போது விலை உயர்ந்துள்ள நேரத்தில் பலன் அளிக்கிறது. சரி இதனால் மக்களுக்கு என்ன பிரச்சனை..?

தங்கத்தின் விலை குறைந்தால், அடகு வைத்த தங்க நகை மதிப்பை காட்டிலும் வாங்கிய கடன் அதிகமாக இருக்கும். இதனால் வங்கிகள் கடன் வாங்கியவரை டாப் அப் செய்ய சொல்லும் அல்லது 85% அளவீட்டுக்கு கொண்டு வர அசல் தொகையை கடன் காலம் முடிவுதற்கு முன்ரு செலுத்த வங்கிகளும், நிதி நிறுவனங்களும் மக்களை தள்ளும். இத்தகைய நடைமுறையை வங்கி துறையில் மார்ஜின் கால் என அழைக்கப்படுகிறது.

அப்படி கட்ட முடியாத நபர்களின் தங்கம் ஏலத்திற்கு விடப்படும். இவை அனைத்தும் வங்கிகள் முறையாக நோட்டீஸ் கொடுத்து, அதன் பின்பு தான் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனால் தங்கம் விலை சரிவு என்பது வங்கிகளை பாதிக்காது மாறாக சாமானிய மக்களை தான் பாதிக்கும். இத்தகைய தங்கம் விலை சரிவு மக்கள் கையில் இருக்கும் பெரும் தொகையை வங்கி அமைப்பிற்குள் கொண்டு வரும் போது இது நுகர்வோர் சந்தையை கடுமையாக பாதிக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

நுகர்வோர் சந்தை பாதித்தால் உற்பத்தி, வேலைவாய்ப்பு, மக்களின் வருமானம் என அனைத்தையும் பாதிக்கும், இது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதே தற்போதைய அச்சம்.

Share This Article

English summary

Gold Loan: Why Falling Gold Prices Could Trigger Urgent Margin Calls and Auction Notices from Banks

Pledged Your Gold Jewelry? Why Falling Gold Prices Could Trigger Urgent Margin Calls and Auction Notices from Banks — தங்க நகை கடன் வாங்கியிருக்கீங்களா..? முதல்ல இதை படிங்க..!!

Story first published: Monday, October 26, 2026, 18:44 [IST]

Other articles published on Oct 26, 2026

Read More

Previous Post

இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம்: இரண்டு மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு

Next Post

ரூ.100 கோடி இலஞ்ச வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது: ஸ்டாலின் கடும் கண்டனம்

Next Post
ரூ.100 கோடி இலஞ்ச வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது: ஸ்டாலின் கடும் கண்டனம்

ரூ.100 கோடி இலஞ்ச வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது: ஸ்டாலின் கடும் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin