• Login
Monday, October 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

களுத்துறையில் உணவக உரிமையாளர் மற்றும் மனைவி சுட்டுக்கொலை: பிரதான சந்தேகநபர் கடுவெலையில் கைது! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
களுத்துறையில் உணவக உரிமையாளர் மற்றும் மனைவி சுட்டுக்கொலை: பிரதான சந்தேகநபர் கடுவெலையில் கைது! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
களுத்துறையில் உணவக உரிமையாளர் மற்றும் மனைவி சுட்டுக்கொலை: பிரதான சந்தேகநபர் கடுவெலையில் கைது!

களுத்துறை நாகொட பகுதியில் உணவக உரிமையாளர் மற்றும் மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கடுவெல ரணால பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


களுத்துறை, ஒக்டோபர் 26: களுத்துறை, நாகொட பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரும் அவரது மனைவியும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பிரதான துப்பாக்கிதாரி, களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவெல, ரணால பகுதியில் உள்ள வீடொன்றில் தலைமறைவாக இருந்தபோதே சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி களுத்துறை, நாகொட பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றின் முன்பாக இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் உணவகத்திற்கு முன்பாகத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவத்தில் 54 வயதுடைய உணவக உரிமையாளர் உயிரிழந்ததுடன், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவரது மனைவி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்தபோது உயிரிழந்தார்.

ஒரே சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டறிவதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன் ஒரு பகுதியாக, தொலைபேசி தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய கண்காணிப்புக் கமராக்களின் (CCTV) பதிவுகள் ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் பிரதானமாக ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர் கடுவெல பகுதியில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ரணால பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பதுளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும், ‘திப்பிட்டிகொட சக்தி’ என்ற பெயரில் அறியப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் ஒருவரின் உறவினருக்குச் சொந்தமான வீட்டிலேயே சந்தேகநபர் தலைமறைவாக இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், ‘களுத்துறை நவீன்’ என்ற பெயரில் அறியப்படும் நபர் ஒருவரின் உத்தரவின் பேரில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் T-56 ரக துப்பாக்கி, வேறொரு நபரால் துப்பாக்கிதாரிக்கு வழங்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டின் பின்னர் குறித்த ஆயுதம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட இடைமாறலுக்கு அருகில் மற்றுமொரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், துப்பாக்கியை வழங்கிய நபர், அதனைப் பின்னர் பெற்றுக்கொண்டவர் மற்றும் சம்பவத்திற்கான உத்தரவை வழங்கியதாகக் கூறப்படும் நபர் தொடர்பான தகவல்கள் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

Previous Post

காவல் துறை காவலில் கைதி மரணம் தொடர்பாக நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி | Makkal Osai

Next Post

வாய் நிறைய மீசையுடன் பிறந்த பச்சிளம் குழந்தை.. வாயை பிளந்த நெட்டிசன்கள்.. ஈக்வடார் பின்னணி என்ன | Ecuador Newborn Baby With a Thick Moustache Goes Viral.. What’s the Real Story?

Next Post
வாய் நிறைய மீசையுடன் பிறந்த பச்சிளம் குழந்தை.. வாயை பிளந்த நெட்டிசன்கள்.. ஈக்வடார் பின்னணி என்ன | Ecuador Newborn Baby With a Thick Moustache Goes Viral.. What’s the Real Story?

வாய் நிறைய மீசையுடன் பிறந்த பச்சிளம் குழந்தை.. வாயை பிளந்த நெட்டிசன்கள்.. ஈக்வடார் பின்னணி என்ன | Ecuador Newborn Baby With a Thick Moustache Goes Viral.. What’s the Real Story?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin