லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் ஒக்டேன் 95 பெட்ரோல் விலை லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒக்டேன் 92 பெட்ரோல், டீசல் உள்ளிட்ட ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைத் திருத்தம் ஒக்டேன் 95 பெட்ரோலுக்கு மாத்திரம் பொருந்தும் என லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. (a)
