Last Updated:
அனுபவமிக்க சஞ்சு சாம்சனை 3-ஆம் இடத்தில் களமிறக்கி விட்டு, வைபவுக்கு அவரது இயல்பான இடத்தை வழங்கலாம்
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 3-ஆம் எண் வரிசையில் பேட்டிங் செய்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் (Vaibhav Sooryavanshi) ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆழமான விமர்சனங்களையும் யோசனைகளையும் பகிர்ந்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது மேட்ச்சில் காயமடைந்த இஷான் கிஷானுக்குப் பதிலாக இந்திய அணியின் லெவனில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டார். சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாகக் களம் இறங்கியதால், வைபவ் சூர்யவன்ஷி வழக்கத்திற்கு மாறாக 3-வது இடத்தில் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
போட்டியின் 6-வது ஓவரில் விக்கெட் விழுந்ததும் களத்திற்கு வந்த வைபவ், 8 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் “வைபவ் போன்ற ஒரு இளம் வீரரை உடனடியாகக் குறை கூறுவது தவறானது. ஆனால், அவர் களத்தில் நீருக்கு வெளியே தவிக்கும் மீனைப் போல சௌகரியமின்றி காணப்பட்டார்.
6-வது ஓவரிலேயே களம் புகுவது அவரது இயல்பான ஆட்ட பாணிக்கு ஏற்றது அல்ல. அவரிடம் சென்று ‘கொஞ்சம் நிதானியுங்கள், களத்தில் நிலைத்து நில்லுங்கள், பந்தை உடலுக்கு அருகிலேயே எதிர்கொண்டு கவனியுங்கள்’ என்று கூறி அமைதிப்படுத்தியிருக்க வேண்டும்.
அபிஷேக், சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் ஆகிய மூவரும் ஒரே அணியில் விளையாடும் பட்சத்தில், அனுபவமிக்க சஞ்சு சாம்சனை 3-ஆம் இடத்தில் களமிறக்கி விட்டு, வைபவுக்கு அவரது இயல்பான இடத்தை வழங்கலாம் என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

