• Login
Sunday, October 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாளையே ஈரான் மீது தாக்குதல்: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..!! | Trump Warns of Possible Iran Strike ‘Tomorrow’ as Hormuz Talks Raise Middle East Tensions

GenevaTimes by GenevaTimes
October 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
நாளையே ஈரான் மீது தாக்குதல்: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..!! | Trump Warns of Possible Iran Strike ‘Tomorrow’ as Hormuz Talks Raise Middle East Tensions
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாளையே ஈரான் மீது தாக்குதல்: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது நாளையே தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ளார்.டிரம்பின் இந்த திடீர் அறிவிப்பால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகமாகியுள்ளது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா நகரில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் ஒரு ஒப்பந்தத்தை விரும்புவதாகவும், ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஈரான் மதித்து நடக்குமா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நாளை கூட இருக்கலாம், நான் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதேசமயம், எங்களுக்குள் ஒரு நல்ல, பெரிய மற்றும் அழகான ஒப்பந்தம் உருவாவதற்கும் வாய்ப்புள்ளது என்றார். ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது, ஆனால் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் அந்த ஒப்பந்தத்தை மதித்து நடப்பார்களா? என்பது தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாளையே ஈரான் மீது தாக்குதல்: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..!!

பின்னர் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட டிரம்ப், ஈரான் ஒரு உடன்படிக்கைக்கு வர தவறினால் அமெரிக்கா மற்றொரு ராணுவ நடவடிக்கையை தொடங்கும் என மீண்டும் எச்சரித்தார். முன்னதாக அமெரிக்கா தனது கடற்படைகளை நீக்கினால், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதாக ஈரான் முன்மொழிந்ததாக வந்த செய்திகளை ஈரான் தரப்பு நிராகரித்துள்ளது.

ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், பாகிஸ்தான் மத்தியஸ்தர்களுக்கு ஈரான் எந்தவித புதிய ஒப்பந்த உத்தரவாதமும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வழியாக ஈரான் இந்த ஆஃபரை வாஷிங்டனுக்கு அனுப்பியதாக கூறிய செய்திகளை பொய் என குறிப்பிட்டுள்ளது.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஏழு நாட்களுக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்த ஈரானின் திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை அமெரிக்கா இதற்கு எந்த வித பதிலையும் தராமல் உள்ளது என்றார். அமெரிக்கா தரப்பில் ஏதாவது நேர்மை இருக்கிறதா?, ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான வழி தெளிவாகவே உள்ளது. ஏழு நாட்களுக்குள் திறக்கப்படும் என்ற எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.ஆனால் அவர்கள் நேர்மையாக இல்லை என கூறி இருந்தார்.

இதற்கிடையே அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் ஒரு பெரிய தாக்குதலை ஈரான் மீது நடத்த திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே வேளையில் பேச்சுவார்த்தை முறையில் தீர்வு சாத்தியம் என்ற சமிக்ஞைகளையும் அமெரிக்கா வெளிப்படுத்தி வருகிறது. இதனால் 8 மாதங்களாக முடிவில்லா கதையாக ஈரான் போர் நீடிக்கிறது.

Share This Article

English summary

Trump Warns of Possible Iran Strike ‘Tomorrow’ as Hormuz Talks Raise Middle East Tensions

நாளையே ஈரான் மீது தாக்குதல்: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..!! / US President Donald Trump has warned that fresh strikes on Iran could take place “as soon as tomorrow,” while keeping open the possibility of a diplomatic agreement.

Story first published: Sunday, October 25, 2026, 9:32 [IST]

Other articles published on Oct 25, 2026

Read More

Previous Post

குளிக்கச் சென்ற 12 வயது மாணவனை இழுத்துச் சென்ற முதலை – சோக சம்பவம்! – Sri Lanka Tamil News

Next Post

மூதூர் பகுதியில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு

Next Post
மூதூர் பகுதியில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு

மூதூர் பகுதியில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin