Last Updated:
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 114 பதக்கங்களுடன் இந்தியா முதல்முறையாக நான்காவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 114 பதக்கங்களுடன் இந்தியா முதல்முறையாக நான்காவது இடம் பிடித்து சாதனை படைத்தது.
ஜப்பானின் அய்ச்சி – நகோயா நகரில், கடந்த 19-ஆம் தேதி தொடங்கிய ஐந்தாவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உற்சாகமாக நிறைவு பெற்றன. கடைசி நாளில் 9 தங்கப்பதக்கங்களுக்கான வில்வித்தை, போஷியா, பளுதூக்குதல், வாள்வீச்சு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் முடிவில் சீனா 207 தங்கம், 116 வெள்ளி, 111 வெண்கலம் என மொத்தம் 434 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
64 தங்கம், 60 வெள்ளி, 62 வெண்கலம் என 186 பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்தையும், 45 தங்கம், 49 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 146 பதக்கங்களுடன் உஸ்பெகிஸ்தான் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
2022 பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 108 பதக்கங்களுடன் ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா, இம்முறை 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 114 பதக்கங்களைக் குவித்து முதல்முறையாக நான்காவது இடம் பிடித்து அசத்தியது. அதிகபட்சமாக தடகள வீரர்கள் 22 தங்கம் உட்பட மொத்தமாக 65 பதக்கங்களைக் குவித்துள்ளனர். அடுத்தபடியாக, பேட்மிண்டனில் மூன்று தங்கம் உட்பட 16 பதக்கங்களும், துப்பாக்கிச்சுடுதலில் இரண்டு தங்கம் உட்பட ஐந்து பதக்கங்களும் கிடைத்தன.


