இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, விராட் கோலி அவுட்டானதும், அவரது மனைவி அனுஷ்கா சர்மா காட்டிய ரியாக்சன், ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால், தாமதமாக டாஸ் போடப்பட்டது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணியில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை சந்தித்த ரோகித் சர்மா, ஒரு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் இந்திய அணிக்கு 8 ரன்கள் கிடைத்த நிலையில், மழை மீண்டும் குறுக்கிட்டதால், போட்டி தடைப்பட்டது. சற்று தாமதமாக மீண்டும் போட்டி தொடங்கியதும், நசீம் ஷா வீசிய ஓவரின் முதல் பந்திலேயே விராட் கோலி பவுண்டரி அடித்தார். அடுத்த பந்து டாட் ஆக அமைந்த நிலையில், மூன்றாவது பந்தில், மோசமான ஷாட் ஒன்றை அடித்து, உஸ்மான் கான் கையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க:
பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி..
பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் விராட் கோலி ஆட்டமிழந்ததால், மைதானத்தில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த அவரது மனைவி அனுஷ்கா சர்மா, அதிர்ச்சியான ஒரு ரியாக்சன் கொடுத்தார். இதை அங்கிருந்த கேமராமேன் ஒருவர் படம்பிடித்திருந்தார்.
Anushka Sharma upset after Virat Kohli early dismissal. #INDvsPAK pic.twitter.com/QgKJP50KkI
— Mufa Kohli (@MufaKohli) June 9, 2024
இந்த காட்சி சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், கோலி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஏன் சரியாக விளையாடவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அயர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் 1 ரன்னில் ஆட்டமிழந்த விராட் கோலி, தற்போது 4 ரன்னில் ஆட்டமிழந்திருப்பதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, விராட் கோலி மீண்டும் எழுந்து வருவார் என்றும், அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்றும் ரசிகர்கள் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)