சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமானின் அரசாங்கப் படைகள், ஈரானின் ஆதரவு பெற்ற படையான ஹவுதிக்களின் 300 உறுப்பினர்களை ஒரே நாளில் தாக்கி கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 700-க்கும் மேற்பட்ட இலக்குத் தாக்குதல் நடவடிக்கைகளை நடத்தியுள்ளன.
அழிக்கப்பட்ட ஆயுதங்கள்
இந்நிலையில் பல நாட்களாகக் கடுமையான மோதல்கள் நடைபெற்று வரும் தைஸ் நகரில், களக் கட்டளை மையங்கள், ஹவுதிக்களின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் விநியோகப் பாதைகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஏமானின் அரசுப் படைகள் 300 ஹவுதிப் போராளிகளைக் கொன்றதோடு, 68 வாகனங்கள் அல்லது ஆயுதங்களையும் அழித்ததாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

