• Login
Saturday, October 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான மேட்ச்… நியூசி.-க்கு எதிரான 2ஆவது டி20-யில் இந்திய அணி த்ரில் வெற்றி | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 24, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான மேட்ச்… நியூசி.-க்கு எதிரான 2ஆவது டி20-யில் இந்திய அணி த்ரில் வெற்றி | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 24, 2026 4:24 PM IST

கடந்த வியாழன் அன்று நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 

நிதிஷ் குமார் ரெட்டி - திலக் வர்மா
நிதிஷ் குமார் ரெட்டி – திலக் வர்மா

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடைசி ஓவர் வரை நீடித்த இந்த போட்டியின் மிகவும் பரபரப்பான தருணத்தில் 5 ஆவது பந்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.

பேட்ஸ்மேன்கள் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்திய அணி நியுசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

கடந்த வியாழன் அன்று நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.  இந்நிலையில் 2 ஆவது போட்டி இன்று கிறிஸ் சர்ச்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் பேட்ஸ்மேன்கள் கிளென் பிலிப்ஸ் 43 பந்துகளில் 70 ரன்களும், பெவோன் ஜேக்கப்ஸ் 46 பந்துகளில் 58 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், பிரின்ஸ் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அதைத் தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க விரர்கள் சஞ்சு சாம்சன் 14 ரன்னிலும், அபிஷேக் சர்மா 27 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்னும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 7 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

இதனால் இந்திய அணி 10.5 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்து தடுமாறியது. அடுத்து வந்த பேட்ஸ்மேன்களில் நமன்  திர்  17 பந்துகளில் 3 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார்.

திலக் வர்மா 26 பந்துகளில் 51 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 13 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 1 பந்து மட்டுமே மீதம் இருந்த நிலையில் 19.5 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

19 ஆவது ஓவரில் 18 ரன்களும், 18 ஆவது ஓவரில் 17 ரன்களும் இந்திய அணி எடுத்தது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Read More

Previous Post

இறக்குமதியை தடையை ஏமாற்றி கொண்டுவரப்பட்ட பாகிஸ்தான் பொருள்… பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.72,000 அடிப்படை சம்பளமா? வெளியான சூப்பர் தகவல்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.72,000 அடிப்படை சம்பளமா? வெளியான சூப்பர் தகவல்! | வணிகம் போட்டோகேலரி

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.72,000 அடிப்படை சம்பளமா? வெளியான சூப்பர் தகவல்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin