உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வருவதன் காரணமாக, இந்த ஆண்டின் இறுதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நேற்று முற்பகல் (23) பத்தரமுல்லையில் உள்ள ‘வோட்டர்ஸ் எட்ஜ்’ (Waters Edge) ஹோட்டலில் நடைபெற்ற, அரச நில அளவையாளர் சங்கத்தின் 100-வது ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எரிபொருள் இறக்குமதிக்கான செலவு
“மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல், எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு எரிபொருள் இறக்குமதிக்காக நாம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டோம். இந்த ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதிக்குள்ளேயே நாம் ஏற்கனவே 4 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டுள்ளோம்.

ஆண்டின் மூன்றில் இரண்டு பங்கு காலத்திலேயே 4 பில்லியன் அமெரிக்கடொலர்கள் செலவிடப்பட்டுள்ளதால், இந்த ஆண்டின் இறுதியில் மொத்தச் செலவு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டக்கூடும்.
எனவே, அந்நியச் செலாவணி மீதான அழுத்தத்தைக் கையாள்வதே நாம் எதிர்கொள்ளும் பிரதான சவாலாகும்.” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

