• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பக்தர்களின் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு

GenevaTimes by GenevaTimes
June 10, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பக்தர்களின் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜம்முவில் பக்தர்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் உள்ள ஷிவ்கோரிக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்று மாலை 6.10 மணியளவில் ரஜோரி மாவட்டத்தின் எல்லையான பூனி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சுடு நடத்தினர். அப்போது, ஓட்டுநர் மீதும் குண்டு பாய்ந்ததால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் பாய்ந்தது. இதில் மேலும் சில பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

விளம்பரம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், ராணுவத்தினரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் உதவிக்கு வந்தனர். பேருந்தை மீட்டு, அதில் இருந்த அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்ட நிலையில், குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானது தெரியவந்தது. அத்துடன், 33 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். அவர்கள் உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த கொடூரமான செயல் மனித குலத்திற்கு எதிரான குற்றம் எனக் கூறியுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தேசம் நிற்பதாக தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
பிரதமர் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற வேண்டுமா? வழிமுறைகள் இதோ!

பயங்கரவாத தாக்குதலால் ஏற்பட்டுள்ள நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்காவுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, இந்த வெட்கக்கேடான சம்பவம் ஜம்மு காஷ்மீரில் கவலைக்கிடமான பாதுகாப்புச் சூழலை விளக்கும் உண்மையான படம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

.

Read More

Previous Post

சஜித்தின் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் 228 ஆவது கட்ட நிகழ்வு

Next Post

கண்கலங்கிய நசீம் ஷா; ஆறுதல் சொன்ன ரோகித் சர்மா | T20 WC | rohit sharma consoles heart broken naseem shah

Next Post
கண்கலங்கிய நசீம் ஷா; ஆறுதல் சொன்ன ரோகித் சர்மா | T20 WC | rohit sharma consoles heart broken naseem shah

கண்கலங்கிய நசீம் ஷா; ஆறுதல் சொன்ன ரோகித் சர்மா | T20 WC | rohit sharma consoles heart broken naseem shah

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin