• Login
Saturday, October 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கர்ப்பிணி பெண்களுக்கு அரசு வழங்கும் ரூ.6000 நிதியுதவி! இரண்டாவது குழந்தைக்கும் கிடைக்குமா? முழு விவரம்! | PM Matru Vandana Yojana: Pregnant Women Can Get Up to Rs 6,000 maternity benefits

GenevaTimes by GenevaTimes
October 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கர்ப்பிணி பெண்களுக்கு அரசு வழங்கும் ரூ.6000 நிதியுதவி! இரண்டாவது குழந்தைக்கும் கிடைக்குமா? முழு விவரம்! | PM Matru Vandana Yojana: Pregnant Women Can Get Up to Rs 6,000 maternity benefits
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கர்ப்பிணி பெண்களுக்கு அரசு வழங்கும் ரூ.6000 நிதியுதவி! இரண்டாவது குழந்தைக்கும் கிடைக்குமா? முழு விவரம்!

இந்திய அரசு நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அப்படி கர்ப்ப காலத்தில் ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதற்காக வழங்கப்படும் திட்டம் தான் “பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா” (PMMVY) திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட PMMVY திட்டத்தின் கீழ் ஏராளமான கர்ப்பிணிகள் நிதியுதவி பெற்று வருகின்றனர். தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் நலனை மையமாகக் கொண்டு யூனியன் மினிஸ்ட்ரி ஆஃப் வுமன் அண்ட் சைல்டு டெவலப்மென்ட் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு அரசு வழங்கும் ரூ.6000 நிதியுதவி! இரண்டாவது குழந்தைக்கும் கிடைக்குமா? முழு விவரம்!

எவ்வளவு நிதியுதவி வழங்கப்படுகிறது?: பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் முதல் குழந்தைக்கு 5000 ரூபாய் இரண்டு தவணைகளாக வழங்கப்படுகிறது. அதில் முதல் தவணையாக ரூ.3,000 வழங்கப்படுகிறது. கர்ப்பத்தை பதிவு செய்து குறைந்தது ஒரு முறையாவது மகப்பேறு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு முதல் தவணை வழங்கப்படும்.

மீதமுள்ள 2000 ரூபாய் குழந்தையின் பிறப்பை பதிவு செய்த பின்னர் அல்லது குழந்தைக்கு 14-வது வாரத்தில் தடுப்பூசி போட்ட பின்னர் வழங்கப்படுகிறது. நிதியுதவி முதல் குழந்தைக்கு மட்டுமல்ல. இரண்டாவது குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தைக்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறந்தால் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.6,000 நிதியுதவி ஒரே தவணையாக வழங்கப்படும். ஆனால் முதல் தவணை போல மகப்பேறு மருத்துவமனையில் பரிசோதனை செய்த பிறகு வழங்கப்பட மாட்டாது. குழந்தையின் பிறப்புக்கு பின்னர் வழங்கப்படும்.

அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் பெண்கள் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி உதவியை பெறலாம். இதையெல்லாம் சேர்த்து முதல் குழந்தைக்கு ரூ.6,000 கிடைக்கும். இந்தத் தொகையை டைரக்ட் பெனிஃபிட் டிரான்ஸ்பர் மூலம் பயனாளிகளின் வங்கி கணக்குக்கு அரசு நேரடியாக அனுப்பி வைக்கிறது.

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?: இந்த திட்டத்திற்கு கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் விண்ணப்பிக்கலாம். முதல் குழந்தைக்கும் நிதி உதவி கிடைக்கும். இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் அதற்கும் நிதி உதவி பெறலாம்.

மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஏற்கனவே வேறு மகப்பேறு நலச் சட்டங்களின் கீழ் நிதியுதவி பெறுபவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. கர்ப்பிணிகள் தங்களுக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திலோ அல்லது மகப்பேறு மையத்திலோ பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் pmmvy.wcd.gov.in என்ற அதிகாரப்பூர்வ PMMVY இணையதளம் மூலமாகவும் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அதற்கு ஆதார் விபரங்கள் மற்றும் கர்ப்பம் தொடர்பான விவரங்கள், வங்கி கணக்கு விவரங்களை வழங்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பத்தின் நிலையை கண்காணித்து எஸ்எம்எஸ் மூலம் தகவல்களைப் பெறலாம்.

இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் என்ன?: கர்ப்ப காலத்தில் சரியான நேரத்தில் பெண்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரம் இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்தால் அதற்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகள் குறித்த நேர்மறையான கண்ணோட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

Share This Article

Story first published: Saturday, October 24, 2026, 6:00 [IST]

Other articles published on Oct 24, 2026

Read More

Previous Post

இரு குழுக்களுக்கு இடையிலான மோதல்…! அடித்து கொல்லப்பட்ட இளைஞர்

Next Post

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு எனது பெயரை சூட்ட சுந்தர்பிச்சை மறுத்து விட்டார் – டிரம்ப்… | Makkal Osai

Next Post
அட்லாண்டிக் பெருங்கடலுக்கு எனது பெயரை சூட்ட சுந்தர்பிச்சை மறுத்து விட்டார் – டிரம்ப்… | Makkal Osai

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு எனது பெயரை சூட்ட சுந்தர்பிச்சை மறுத்து விட்டார் - டிரம்ப்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin