ICU-வுக்கு சென்ற வெள்ளி விலை.. சும்மாயில்ல பாஸ் 53% சரிவு.. என்டரி கொடுக்க இது நல்ல நேரமா..?
ஏழைகளின் தங்கமாகப் பார்க்கப்படும் வெள்ளி, நாளுக்கு நாள் மோசமாக சரிவை எதிர்கொண்டு வருகிறது. இந்திய ரீடைல் சந்தையில் ஒரு கிலோ வெள்ளி விலை அதிகப்படியாக 4.2 லட்சம் வரையில் வர்த்தகமானது, ஆனால் தற்போது உச்ச விலையில் இருந்து சுமார் 53 சதவீதம் சரிந்து 1.95 லட்சம் ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 11 மாத சரிவாகும், சரி வெள்ளி விலை ஏன் வேகமாகச் சரிந்து வருகிறது..
2025ல் நவம்பர், டிசம்பர் மாதங்கள், 2026ல் ஜனவரி, பிப்ரவரி மாத காலகட்டத்தில் தங்கத்தைக் காட்டிலும் வெள்ளி விலை வேகமாக உயர்ந்தது. உள்நாட்டுத் தேவை, அதிகப்படியான சீன கொள்முதல், தங்கம் விலை உயர்வால் வெள்ளிக்குத் தாவிய முதலீட்டாளர்கள் எனப் பல காரணிகள் வெள்ளி விலையை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியது. ஆனால் சரிவு பாதை துவங்கிய பின் வெள்ளி எகிறிய வேகத்தில் இறங்கியது என்பது தான் உண்மை.

வெள்ளி விலை சரிவுக்கு 3 முக்கியமான காரணம் உள்ளது. ஈரான் – அமெரிக்கா போர் வாயிலாகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு, பணவீக்க உயர்வால் மத்திய வங்கிகள் அதிகரித்த வட்டி விகிதம் காரணமாக பத்திர சந்தையில் அதிக முதலீடுகள் குவிந்தது, ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி.. இவை அனைத்தும் சேர்த்து முதலீட்டாளர்களுக்குத் தங்கம், வெள்ளிக்கான தேவையை மொத்தமாகக் குறைத்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவில் பணவீக்கம் குறையாகக் காரணத்தால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் இந்த மாத இறுதியில் நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளி விலை கூடுதலாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை மேலும் உறுதி செய்யும் வகையில் கோல்டு – சில்வர் ரேஷியோ 73-ஐ தொட்டு இருக்கும் காரணத்தால் வெள்ளி விலை வேகமாக சரிய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இது முதலீடு செய்ய சரியான நேரமாக தெரிந்தாலும், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமாக இது உள்ளது.
காரணம் தற்போது என்டரி கொடுத்தால் வெள்ளி விலை உயரவும் வாய்ப்புள்ளது, சரியவும் வாய்ப்புள்ளது என்பதால் மிகுந்த எச்சரிக்கை உடன் செயல்பட வேண்டும். இதேபோல் வெள்ளியில் முதலீடு செய்யும் போது பெரும் தொகை கொண்டு நுழைய வேண்டாம், விலை பிரேக்டவுன் ஆகும் போது சிறிய சிறிய தொகை கொண்டு எனட்ரி கொடுக்கலாம்.
ஆனால் உங்களுடைய மொத்த முதலீட்டு போர்ட்போலியோவில் 3-5 சதவீதத்திற்கு மேல் வெள்ளியில் முதலீடு செய்ய வேண்டாம். வெள்ளி விலைக்கான பாதை தெளிவாக தெரிந்த பின்பு படிப்படியாக முதலீட்டை அதிகரிக்கலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
