• Login
Friday, October 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Jio Platforms IPO | 2 நாட்களில் 5 மடங்கு முதலீடு : ஜியோ பொதுப்பங்கு முதலீடுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Jio Platforms IPO | 2 நாட்களில் 5 மடங்கு முதலீடு : ஜியோ பொதுப்பங்கு முதலீடுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 23, 2026 9:20 AM IST

Jio Platforms IPO | ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு இரண்டாம் நாள் வர்த்தகத்தில் ஐந்து மடங்குக்கும் அதிகமாக வாங்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ

இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் மிகப்பெரிய வெளியீடான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு இரண்டாம் நாள் வர்த்தகத்தில் முதலீட்டாளர்களால் 5 மடங்குக்கும் அதிகமாக வாங்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், தொலைத்தொடர்பு, கிளவுடு கம்ப்யூட்டிங், கிளவுடு கேமிங் மற்றும் ஸ்டோரேஜ் உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருகிறது. பங்குச்சந்தை மூலம் 30 ஆயிரத்து 213 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்ட ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம், அதற்கான பொதுப் பங்கு வெளியீட்டிற்கான விண்ணப்பங்களை நேற்று முன் தினம் தொடங்கியது.

1,065 ரூபாய் முதல் 1,119 ரூபாய் வரை ஒரு பங்கின் விலை நிர்ணயிக்கப்பட்டு 12 பங்குகள் கொண்ட லாட் ஆக வெளியானது. காலை 10 மணிக்கு ஐபிஓ முன்பதிவு தொடங்கிய நிலையில், வெறும் 100 நிமிடங்களில் அனைத்துப் பங்குகளும் முன்பதிவு செய்யப்பட்டு ஜியோ பிளாட்பார்ம்ஸ் வரலாற்றுச் சாதனை படைத்தது. மெகா வெளியீடுகளில் முழுமையான சந்தாவைப் பெற்ற அதிவேகப் பங்கு வெளியீடாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மாறியுள்ளது. முதல் நாள் முடிவில் ஏறத்தாழ 3 மடங்கிற்கு மேல் பங்கு முன்பதிவு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, ஜியோ பிளாட்பார்ம்ஸின் பொதுப் பங்கு வெளியீட்டிற்கு முதலீட்டாளர்களிடையே இரண்டாவது நாளிலும் வலுவான வரவேற்பு தொடர்ந்தது. இரண்டாம் நாளில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான ஏலங்கள் பதிவாகியுள்ளன. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, இந்த ஐபிஓ 5.57 மடங்கு சந்தாவை பெற்றுள்ளது.

அதாவது, ஆங்கர் முதலீட்டாளர் எனப்படும் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர் அல்லாத பங்குப் பிரிவில் வழங்கப்பட்ட 19 கோடியே 75 லட்சம் பங்குகளுக்கு எதிராக, முதலீட்டாளர்கள் 110 கோடிக்கும் அதிகமான பங்குகளுக்கு ஏலம் கோரினர். இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏலங்கள் பதிவாகியுள்ளன. தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர் பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு மிக அதிகபட்சமாக 13.29 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

இதுதவிர நிறுவனம் அல்லாத பெரு முதலீட்டாளர் பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு முதல் நாளில் 1.68 மடங்காக இருந்த சந்தா, இரண்டாம் நாளில் 5.97 மடங்காக உயர்ந்துள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில்1.54 மடங்கும், ஊழியர் பிரிவில் 2 .10 மடங்கும், பங்குதாரர் பிரிவில் 4.05 மடங்கும் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இரண்டு நாட்களில் மட்டும் 75 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: ஜியோ IPO-வை வாங்க குவிந்த முதலீட்டாளர்கள்.. 22% லாபத்துடன் அதிரடி என்ட்ரி!

ஆங்கர் மற்றும் ஆங்கர் அல்லாத ஏலங்கள் அனைத்தையும் சேர்த்து மொத்த ஏலங்களின் மதிப்பு சுமார் 3 லட்சத்து 73 ஆயிரம் கோடியைத் தொட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளான இன்றும் அதிக அளவிலான விண்ணப்பங்கள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் யாருக்கு எவ்வளவு பங்குகள் என்று முடிவு செய்யப்பட்டு, வரும் 26ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டு, ஜியோ நிறுவனத்தின் பங்குகள் 28 ஆம் தேதி பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன

Read More

Previous Post

தங்கம் விலை ஒரு லட்சத்திற்கு கீழ் வரலாம்? வரலாற்றில் இல்லாத மாற்றம் வரப்போகிறது | Gold price can come below one lakh? A change unprecedented in history is coming

Next Post

Aplikasi alternatif ganti Waze masih lembab – Anwar mohon maaf | Makkal Osai

Next Post
Aplikasi alternatif ganti Waze masih lembab – Anwar mohon maaf | Makkal Osai

Aplikasi alternatif ganti Waze masih lembab - Anwar mohon maaf | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin