• Login
Friday, October 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பதுளையில் பாரிய திருட்டு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்!

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பதுளையில் பாரிய திருட்டு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பதுளையில் இலட்சம் பெறுமதியான டயர்களைத் திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (21-10-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, ஹாலிஎல போகஹமடித்த பகுதியில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றிலேயே  இவ்வாறு திருட்டு இடம்பெற்றுள்ளது.

இராணுவச் சிப்பாய்

இதில் சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான 99 டயர்கள் திருடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கைது
செய்யப்பட்ட சந்தேகநபர் பலாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவச்
சிப்பாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பதுளையில் பாரிய திருட்டு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்! | Ex Soldier Arrested Over Rs 2 2M Tyre Theft

இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய
மற்றைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.

குறித்த டயர் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக்
கமராக்களின் செயற்பாட்டைத் தடைசெய்துவிட்டு சந்தேகநபர்கள் திருட்டில்
ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்புக் கமராக்கள் 

எனினும், அருகிலுள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருந்த
பாதுகாப்புக் கமராக்கள் மற்றும் பலாங்கொடை வரையிலான பிரதான வீதிகள்,
உள்வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 100 சிசிடிவி கமராக்களின் காணொளிப்
பதிவுகளைப் காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.

இதன்போது, திருடப்பட்ட டயர்களை
ஏற்றிச் சென்ற லொறியின் இலக்கத்தை அடையாளம் காண முடிந்துள்ளது.

பதுளையில் பாரிய திருட்டு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்! | Ex Soldier Arrested Over Rs 2 2M Tyre Theft

குறித்த வாகன
இலக்கத்தை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு அனுப்பி லொறியின்
உரிமையாளரைப் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.


ஓபநாயக்க பகுதியைச் சேர்ந்த குறித்த லொறியின் உரிமையாளர், அந்த வாகனத்தை மூன்று
மாத காலத்துக்கு சந்தேகநபர் ஒருவருக்கு வாடகைக்கு வழங்கியிருந்தமை விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

இதனையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்று தேடுதல் நடத்திய
காவல்துறையினர், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறியைக் கண்டுபிடித்துள்ளனர்.

லொறியைச் செலுத்திய சந்தேகநபரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியபோது அவரது வீட்டிலிருந்து திருடப்பட்ட டயர்களில் 66 டயர்களை மீட்டுள்ளதாகவும்
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பதுளையில் பாரிய திருட்டு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்! | Ex Soldier Arrested Over Rs 2 2M Tyre Theft

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (22-10-2026) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஹாலி-எல காவல்துறையினர் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

தலைமைச் செயலகத்தில் 22 பேருக்கு துறை ஒதுக்கீட்டு ஆணைகள்: அமைச்சர் சரத்குமார் வழங்கினார்… | Makkal Osai

Next Post

Gold Price Drop | தங்கம் வாங்க சரியான நேரம்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Drop | தங்கம் வாங்க சரியான நேரம்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Price Drop | தங்கம் வாங்க சரியான நேரம்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin