• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பாக். எதிரான மேட்ச்சில் இந்திய அணியில் மாற்றம்? யார் யாருக்கு வாய்ப்பு? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 10, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பாக். எதிரான மேட்ச்சில் இந்திய அணியில் மாற்றம்? யார் யாருக்கு வாய்ப்பு? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்களில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து பார்க்கலாம்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 29 ஆம் தேதிவரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 55 போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதன்முறையாக அமெரிக்கா இந்த போட்டித் தொடரை வெஸ்ட் இண்டீசுடன் இணைந்து நடத்துகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நாசோ சர்வதேச மைதானத்தில்தான் இந்த போட்டி நடைபெறுகிறது. இது நகருக்கு வெளியே அமைக்கப்பட்ட மைதானமாகும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 34 ஆயிரம்பேர் இந்த போட்டியை நேரில் பார்த்து ரசிக்க முடியும்.

விளம்பரம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் களம் காண்கின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்தை வென்றது. அனுபவம் மிக்க அணியான பாகிஸ்தான், தனது முதல் போட்டியில் அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இருப்பினும், கடைசி ஓவர்களில் பாகிஸ்தான் அணி மிரட்டலான பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்தது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் விளையாடும் 11 பேர் அணியில் இடம்பெறலாம்.

விளம்பரம்

பாகிஸ்தான் தரப்பில், பாபர் ஆசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், உஸ்மான் கான், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, ஷதாப் கான், இமாத் வாசிம், ஷஹீன் ஷா அப்ரிடி, முகமது அமீர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் ஆகிய வீரர்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. இவற்றில் இந்தியா 6 முறையும், பாகிஸ்தான் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

விளம்பரம்

இன்றைய போட்டி நடைபெறும் நியூயார்க் ஆடுகளம் பெரும்பாலும் ரன் குவிப்புக்கு சாதகமாக அமையாது. இங்கு பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணிகளே திணறியுள்ளன. இங்கு 3 போட்டிகளில் 6 இன்னிங்ஸ்கள் நடந்து முடிந்துள்ளன. இவற்றில் 2 முறை மட்டுமே 100 ரன்களை தாண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க – World Cup T20 : இலங்கையை கடைசி இடத்திற்கு தள்ளிய வங்கதேச அணி

இன்றைய இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆப்-ல் இந்த போட்டியை கண்டு ரசிக்கலாம்.

விளம்பரம்

.

Read More

Previous Post

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய மார்க்கெட் நிலவரம் இதோ!-check out the gold and silver price on june 10 2024 in chennai market

Next Post

Gold Rate Today | வார தொடக்கத்தில் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Next Post
Gold Rate Today | வார தொடக்கத்தில் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Gold Rate Today | வார தொடக்கத்தில் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin