• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

30 சதுரடியில் தொடங்கிய காபி கடை! இன்று ரூ.180 கோடி மதிப்புள்ள நிறுவனம்! ஸ்டார்ட் அப்-னா இப்படி இருக்கணும்! | From Rs.5 Coffee to a Rs 180-Crore Business: How US Mahendar Built Hatti Kaapi

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
30 சதுரடியில் தொடங்கிய காபி கடை! இன்று ரூ.180 கோடி மதிப்புள்ள நிறுவனம்! ஸ்டார்ட் அப்-னா இப்படி இருக்கணும்! | From Rs.5 Coffee to a Rs 180-Crore Business: How US Mahendar Built Hatti Kaapi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


30 சதுரடியில் தொடங்கிய காபி கடை! இன்று ரூ.180 கோடி மதிப்புள்ள நிறுவனம்! ஸ்டார்ட் அப்-னா இப்படி இருக்கணும்!

ஒரு சில நேரங்களில் சிறியதாக ஆரம்பிக்கும் தொழில் பிற்காலத்தில் பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்து விடும். ஆனால் அதற்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும் முக்கியம். இவை இருந்தால் போதும் தொடங்கும் சிறு தொழிலையும் பெரு வணிகமாக மாற்றிவிடலாம். அப்படித்தான் நவம்பர் 2009-ஆம் ஆண்டு பெங்களூரின் காந்தி பஜாரில் வெறும் 30 சதுர அடி இடத்தில் ஒரு கடையைத் தொடங்கினார் யூ.எஸ்.மகேந்தர்.

தான் தொடங்கிய கடைக்கு மகேந்தர் ஹட்டி காப்பி (Hatti Kaapi) என பெயர் வைத்தார். 2009-ஆம் ஆண்டில் ஒரு கப் ஃபில்டர் காப்பியின் விலை வெறும் 5 ரூபாய் மட்டுமே.

அந்த சமயத்தில் லக்ஸரி கஃபேக்கள் அவ்வளவாக இல்லை. காபி குடிக்க வேண்டும்.. அதே நேரத்தில் விலையும் குறைவாக இருக்க வேண்டும்.. என்று எண்ணுபவர்களுக்காக தொடங்கப்பட்டது தான் ஹட்டி காபி. மகேந்தரின் சிறிய முயற்சி இன்று ஏர்போர்ட் முதல் ஐடி நிறுவனங்கள் வரை பரந்து விரிந்து மிகப்பெரிய தொழிலாக மாறி இருக்கிறது.

30 சதுரடியில் தொடங்கிய காபி கடை! இன்று ரூ.180 கோடி மதிப்புள்ள நிறுவனம்! ஸ்டார்ட் அப்-னா இப்படி இருக்கணும்!

காபி தொழிலும், மகேந்திரன் பின்னணியும்: கர்நாடகாவின் காபி விளைச்சல் அதிகம் இருக்கும் பகுதியான ஹாசன் நகரில் பிறந்தவர் மகேந்தர். காபி அவருடைய டிஎன்ஏவிலேயே இருக்கிறது என்று கூறும் அவர்.. காபி வியாபாரம் மட்டுமின்றி ப்ரோக்கர் தொழிலும் ஈடுபட்டு வருகிறார்.

காபி விளைச்சல் பகுதியில் இருந்து வந்ததாலோ என்னவோ அதை விளைவிக்கும் விவசாயிகள் பற்றியும் சரி.. வித விதமான காபி வெரைட்டி பற்றியும் சரி நன்கு அறிந்தவர் மகேந்தர். கஃபே காபி டே-வின் நிறுவனரான மறைந்த வி.ஜி.சித்தார்த்தாவை இன்ஸ்பிரேஷனாகக் கொண்ட மகேந்தர், மக்கள் எந்தெந்த சுவையில் எல்லாம் காபி குடிக்க விரும்புகின்றனர் என்பதை ஆராயத் தொடங்கினார்.

அதன் பிறகே காபி பிசினஸை ஆரம்பித்தார். கன்னட மொழியில் “ஹட்டி” என்றால் “வீடு” என்று பொருள். காபி என்பது பில்டர் காபியைக் குறிக்கிறது. வீட்டில் போடப்படும் ஃபில்டர் காபியின் சுவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே ஹட்டி காபி என தனது கடைக்கு பெயர் வைத்தார்.

சக்லேஷ்பூரின் ஜாம்பராடி கிராமத்தை சேர்ந்த சுமார் 15 முதல் 20 விவசாயிகளிடமிருந்து காபி கொட்டைகளை பெறுகிறார். அதாவது 5 முதல் 25 ஏக்கர் தோட்டம் வைத்திருக்கும் விவசாயிகள் மகேந்தருக்கு தரமான காபி கொட்டைகளை விநியோகம் செய்கின்றனர்.

தொழில் வளர்ச்சி: 2009-ஆம் ஆண்டு சாதாரண தெருவோரக் கடையாக தொடங்கிய ஹட்டி காபி இன்று பல பகுதிகளுக்கும் தனது கிளைகளை விரிவு படுத்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்கள் வளாகத்திற்குள் ஹட்டி காபி கடையைக் கொண்டு வந்தது.

அதைத் தொடர்ந்து டெலாய்ட் மற்றும் SAP போன்ற பெரு நிறுவனங்களிலும் ஹட்டி காபி திறக்கப்பட்டது. மகேந்திரனின் வளர்ச்சி அதோடு நிற்கவில்லை.

ஏர்போர்ட்டில் இருந்து வரும் பயணிகள் வசதியாக காபி குடிக்கும் வகையில் லக்கேஜ் எடுத்துக்கொண்டு வெளியேறும் பகுதிகளில் கடைகளை அமைத்தார். அந்த கடைகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதன் பிறகு மாரியாட் இன்டர்நேஷனல் போன்ற பெரிய நட்சத்திர ஹோட்டல்களுக்கும் காபி விநியோகம் செய்தார்.

ஆன்லைன் மூலமாகவும் விற்பனையை விரிவு படுத்தினார். தற்போது லண்டனிலும் ஹட்டி காபி பிரான்ச் இயங்கி வருகிறது மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் தங்களுடைய பிரான்சை விரிவுபடுத்த மகேந்தர் திட்டமிட்டுள்ளார்.

முதலீடும் நிறுவனத்தின் மதிப்பும்: இந்நிறுவனம் 2016-ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு நிதி திரட்ட தொடங்கியது. 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி ஹட்டி காபி நிறுவனத்தின் சந்தை மதிப்பு தோராயமாக 18.6 மில்லியன் டாலரை எட்டி உள்ளது. அதாவது இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ.180 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா காலத்தில் தொழில் கொஞ்சம் பாதிக்கப்பட்டாலும்.. அதன் பின்னர் மீண்டும் சிறப்பாக செயல்படத் தொடங்கியது. 2020-ஆம் நிதியாண்டில் 31 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய நிறுவனம் 2025-ஆம் ஆண்டு ரூ.44.11 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்தது. வெறும் 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட பில்டர் காபி இன்று ரூ.180 கோடி மதிப்புள்ள ஒரு இன்டர்நேஷனல் பிராண்டாக மாறி இருக்கிறது.

Share This Article

Story first published: Thursday, October 22, 2026, 6:00 [IST]

Other articles published on Oct 22, 2026

Read More

Previous Post

“இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்..” அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஆப்பிள்-1 கணினி ரூ.10.9 கோடிக்கு ஏலம்: ஸ்டீவ் ஜாப்ஸின் கடிதம், வோஸ்னியாக்கின் கையொப்பத்துடன் உலக சாதனை!… | Makkal Osai

Next Post
ஆப்பிள்-1 கணினி ரூ.10.9 கோடிக்கு ஏலம்: ஸ்டீவ் ஜாப்ஸின் கடிதம், வோஸ்னியாக்கின் கையொப்பத்துடன் உலக சாதனை!… | Makkal Osai

ஆப்பிள்-1 கணினி ரூ.10.9 கோடிக்கு ஏலம்: ஸ்டீவ் ஜாப்ஸின் கடிதம், வோஸ்னியாக்கின் கையொப்பத்துடன் உலக சாதனை!... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin