• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

செம்மணி அகழ்வாராய்ச்சியில் அதிர்ச்சி அளிக்கும் முடிவுகள்: 3 ஆவது இடைக்கால அறிக்கை சமர்பிப்பு

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
செம்மணி அகழ்வாராய்ச்சியில் அதிர்ச்சி அளிக்கும் முடிவுகள்: 3 ஆவது இடைக்கால அறிக்கை சமர்பிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செம்மணிப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் அகழ்வாராய்ச்சியின் மூன்றாவது இடைக்கால அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் அனுஷா வன்னிநாயக்க அடங்கிய நிபுணர் குழு குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

சுமார் 80 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளின் அடிப்படையில் இந்த அறிக்கையின் தயாரிக்கப்பட்டுள்ளது.

எலும்புச் சேகரிப்புகள்

இதனடிப்படையில், அகழ்வாராய்ச்சியின் போது இதுவரை குறைந்தபட்சம் 574 நபர்களின் (MNI) மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 51 இடங்களில் சிதறிய நிலையிலான மனித எலும்புச் சேகரிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 41 வீதம் சிறுவர்கள்/குழந்தைகளுடையவை என்றும், 22 வீதம் கைக்குழந்தைகளுடையவை என்றும், 30 வீதம் பெரியவர்களுடையவை என்றும் மற்றும் 5 வீதம் வளர்இளம் பருவத்தினருடையவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான உடல்கள்

பெரும்பான்மையான உடல்கள் இயல்பான நிலையில் புதைக்கப்பட்டிருந்தாலும், 227 மற்றும் 429 ஆகிய இலக்கமிட்ட இரு எலும்புக்கூடுகள் தியானம் அல்லது அமர்ந்த நிலையில் (Seated position) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேரடியாக ஆடைகள் எதுவும் மக்கிப்போகாமல் கிடைக்கவில்லை என்றாலும், பொத்தான்கள் (buttons), கொக்கிகள் மற்றும் மெட்டல் ஃபாஸ்டனர்கள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம் இறந்தவர்கள் ஆடைகளுடன் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கைவிரல் மோதிரங்கள், வளையல்கள், பாசிகள், தாயத்துகள், சவப்பெட்டியின் ஆணிகள் மற்றும் இலங்கையின் பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அகழப்பட்ட பகுதி

1870-ஆம் ஆண்டைச் சேர்ந்த நாணயம் ஒன்றும் மற்றும் சாம்பல் அடுக்கில் 1920 முதல் 1994 வரையிலான காலகட்டத்து நாணயங்களும் கிடைத்துள்ளன.

25 ஆவது இலக்க எலும்புக்கூட்டின் அருகில் பிளாஸ்டிக் பை, தையலுக்காக வெட்டப்பட்ட துணித் துண்டுகள், காலணிகள்/மேல்சட்டை மற்றும் காலில் அணியும் சங்கிலி (பாதச்சலங்கை/நூபுரம்) ஆகிய தனிப்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தரைக்குள் ஊடுருவும் ரேடார் (GPR) சோதனையின் மூலம், அகழப்பட்ட பகுதிக்கு அப்பாலும் நிலத்தடியில் மனித எச்சங்கள் இருக்கக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.

இயற்கை பேரிடர்களின் போது விரைவாகச் செய்யப்பட்ட புதைப்புகளின் பண்புகளுடன் இது ஒத்துப் போவதாகக் குறிப்பிட்டுள்ள நிபுணர்கள், முழுமையான உண்மை நிலையை அறிய மேலும் விரிவான பகுப்பாய்வுகள் தேவை எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

சென்னை: யூ-டியூபர் ஹரீஷ் தற்கொலை; பரபரப்பு தகவல் வெளியீடு… | Makkal Osai

Next Post

50% ஊழியர்களுக்கு work from home  கட்டாயம் – வெளியான ஹேப்பி நியூஸ்! என்ன காரணம் தெரியுமா? | இந்தியா போட்டோகேலரி

Next Post
50% ஊழியர்களுக்கு work from home  கட்டாயம் – வெளியான ஹேப்பி நியூஸ்! என்ன காரணம் தெரியுமா? | இந்தியா போட்டோகேலரி

50% ஊழியர்களுக்கு work from home  கட்டாயம் – வெளியான ஹேப்பி நியூஸ்! என்ன காரணம் தெரியுமா? | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin