Last Updated:
இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். இதனால், அப்பகுதியே போர் களம் போன்று காட்சி அளித்தது.
அல்பேனியாவில் பிரதமர் பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீசிய காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் அரசுக்கு எதிராக கடந்த 13 ஆம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஊழல், வேலை வாய்ப்பின்மை, மோசமான கல்வி தரம் உள்ளிட்டவற்றை கண்டித்தும், பிரதமர் எடி ராமா பதவி விலகக்கோரியும் அரசு கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
இந்நிலையில், அந்நாட்டு தலைநகர் திரானாவில் உள்ள கல்வித்துறை அமைச்சக அலுவலகம் முன்பு கூடிய போராட்டக்காரர்கள், காவல்துறை மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். இதனால், அப்பகுதியே போர் களம் போன்று காட்சி அளித்தது.

