• Login
Wednesday, October 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஈரானை புரட்டியெடுக்க திட்டம் போட்ட இஸ்ரேல்.. கடைசி நேரத்தில் வந்த போன் கால்.. கப்சிப்பான நெதன்யாகு..!! | The Phone Call That Stopped Israel: Why Donald Trump Blocked Benjamin Netanyahu’s Secret Plan to Strike Iran

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஈரானை புரட்டியெடுக்க திட்டம் போட்ட இஸ்ரேல்.. கடைசி நேரத்தில் வந்த போன் கால்.. கப்சிப்பான நெதன்யாகு..!! | The Phone Call That Stopped Israel: Why Donald Trump Blocked Benjamin Netanyahu’s Secret Plan to Strike Iran
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானை புரட்டியெடுக்க திட்டம் போட்ட இஸ்ரேல்.. கடைசி நேரத்தில் வந்த போன் கால்.. கப்சிப்பான நெதன்யாகு..!!

அமெரிக்கா – ஈரான் – இஸ்ரேல் மத்தியிலான போர் சர்வதேச பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதித்து இருக்கும் வேளையில், இப்போரை நிறுத்த அமெரிக்கா – ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தனிப்பட்ட முறையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீது நீண்ட நெடிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டது மட்டும் அல்லாமல் ஈரானில் எங்கெல்லாம் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பட்டியலிட்டு தயாராக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் வந்த ஒரு போன் கால் மூலம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கப்சிப் என அமைதியாகியுள்ளார்.

மேலும் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் ஈரான் மீதான நீண்ட நெடிய தாக்குதல் நடத்த முயற்சி செய்த நிலையில் அந்த ஒரு போன்கால் அனைத்தையும் முடக்கியது. போன் கால் செய்தது யார்..?

ஈரானை புரட்டியெடுக்க திட்டம் போட்ட இஸ்ரேல்.. கடைசி நேரத்தில் வந்த போன் கால்.. கப்சிப்பான நெதன்யாகு..!!

பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் இஸ்ரேல் ராணுவம் அடுத்த சில வாரங்களுக்கு தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தும் வகையில் இலக்குகளை பட்டியலிட்டு உள்ளது. இந்த பட்டியலில் ஈரான் நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி தளங்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சேமிபே்பு கட்டமைப்புகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகள் போன்றவற்றை தாண்டி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கான முக்கிய கட்டமைப்புகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் தாக்குதல் துவங்க சில மணிநேரங்களே இருப்பதற்கு முன்பு டிரம்ப், நெதன்யாகுவுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு இந்த தாக்குதல் நடவடிக்கையை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டதன் வாயிலாக இஸ்ரேல் இத்தாக்குதலை கைவிட்டதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இந்த தாக்குதலை அக்டோபர் 10ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தது, இத்தாக்குதலை பிப்ரவரி மாதம் நடத்த தாக்குதலை காட்டிலும் கடுமையான தாக்குதல் செய்ய வேண்டும் என இஸ்ரேல் திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 27-ஆம் தேதி இஸ்ரேலில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்பாகத் தனது ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் இத்தாக்குதலை நடந்த நெதன்யாகு திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் எரிபொருள் விலை 70 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் கச்சா எண்ணெய், எரிபொருள் சப்ளை மொத்தமாக முடங்கி அமெரிக்காவில் நிலைமை மோசமாகிவிடும் என்ற திட்டத்துடன் டிரம்ப் தாக்குதலை நிறுத்த உத்தரவிட்டு உள்ளார்.

ஆனால் இந்த வார இறுதியிலோ அல்லது இஸ்ரேல் தேர்தலுக்கு முன்போ டிரம்ப் அனுமதி இல்லாமல் ஈரான் மீது தாக்குதல் நடத்த நெதன்யாகு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, இதை உறுதிப்படுத்தும் வகையில் நெதன்யாகு பேசியுள்ளார்.

Share This Article

English summary

The Phone Call That Stopped Israel: Why Donald Trump Blocked Benjamin Netanyahu’s Secret Plan to Strike Iran

The Phone Call That Stopped Israel: Why Donald Trump Blocked Benjamin Netanyahu’s Secret Plan to Strike Iran — ஈரானை புரட்டியெடுத்த திட்டம் போட்ட இஸ்ரேல்.. கடைசி நேரத்தில் வந்த போன் கால்.. கப்சிப்பான நெதன்யாகு..!!

Story first published: Wednesday, October 21, 2026, 22:10 [IST]

Other articles published on Oct 21, 2026

Read More

Previous Post

பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கு… லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

அரசு மற்றும் தனிநபர் தரவுகளை இஸ்ரேல் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவே ‘வேஸ்’ செயலிக்கு தடை: பிரதமர் – Malaysiakini

Next Post

அரசு மற்றும் தனிநபர் தரவுகளை இஸ்ரேல் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவே ‘வேஸ்’ செயலிக்கு தடை: பிரதமர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin