தமது இரண்டு மாத சந்தோஷம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் பறிபோக போவதாக யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கவலை தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். இந்தியாவில் மீன் பிடித் தடைக்காலம் கடந்த இரண்டு மாதங்களாக இருந்தமையால், வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிகவும் சந்தோஷமாக தொழில் மேற்கொள்ள கூடியதாவிருந்தது.
எதிர்வரும் 15ம் திகதி அந்த மீன்பிடி தடைக் காலம் முடிவடைவதால் மீண்டும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் வாய்ப்புகள் உள்ளதால் இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க இரு நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்
யாழ்.விசேட நிருபர்

&w=1200&resize=1200,675&ssl=1)