அணு ஆயுத நகரம் உலகில் ரகசியமாக செயல்பட்டு வருவதாக ஒருவர் இணையத்தில் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கூகுள் எர்த் செயலியை பயன்படுத்தி அவர் இதனை கண்டுபிடித்ததாக கூறியுள்ளார்.
ஏலியன்ஸ் குறித்த தகவல்கள் பலவற்றை நாம் பார்த்திருப்போம். அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பது பற்றிய சுவாரசியமான பல செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன. இருப்பினும் அவர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
இது போன்ற சுவாரசியமான விஷயங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு பெரும் கூட்டமே உள்ளது. அந்த வகையில் கூகுள் எர்த் செயலி மூலமாக ஒருவர் வெளி உலகுக்கு தெரியாமல் அமெரிக்காவில் ரகசியமாக இயங்கிய நகரம் ஒன்றை கண்டுபிடித்ததாக கூறியுள்ளார்.
இதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களையும் மேப்பையும் அந்த நபர் பகிர்ந்துள்ளார். ரெடிட் (Reddit) என்ற படத்தில் வெளியான இந்த பதிவுக்கு சுமார் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். அவர் பகிர்ந்துள்ள படத்தில் காணப்படும் பள்ளங்களுக்கு அணுகுண்டு வெடிப்பு காரணம் என்று கூறியுள்ளார். இதற்கு கிண்டலான கமெண்ட்களும் வெளிவந்துள்ளன.
இதையும் படிங்க – படத்தில் மறைந்திருக்கும் யானையை உங்களால் 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
ஒரு சிலர் ஏலியன்கள் மோதியதால் இப்படி பள்ளம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ளனர். இதற்கிடையே அணு ஆயுத நகரம் என்ற சர்ச்சை உண்மைதானா என்பது தொடர்பாகவும் ரெடிட் தளத்தில் தேடப்பட்டுள்ளது.
I think I found a “nuke town” near Area 51
byu/Rip-kid ininterestingasfuck
1992 ஆம் ஆண்டில் அமெரிக்கா ஏராளமான அணுசக்தி சோதனைகளை நடத்தியதாகவும், அவற்றில் நூற்றுக்கணக்கானவை நிலத்தின் அடியில் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட பள்ளங்களே இவை என்றும் ரெடிட் தளத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளன.
.
&w=750&resize=750,375&ssl=1)
