ஜனாதிபதி தேர்தலில் ரணில் மற்றும் சஜித்திற்கு தமிழ் மக்கள் அதிகளவில் வாக்குகளை அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் வெற்றிக்காக எம்மை பயன்படுத்துவதும் தோல்வியடைந்தால் சிங்கள மக்களின் வாக்குகளை பெற அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் அவர்கள்மீது எங்களுக்கு ஒரு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துகின்றது.
இனியும் அவர்களுக்கு நமது ஆதரவை கொடுக்க வேண்டுமா என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
தற்போது சிங்கள் அரசியல்வாதிகள் வடிகட்டிய சர்தர்ப்பவாதிகளா மாறி வருவது வேதனைக்குரிய விடயம்.
சிங்கள தலைவர்கள் அனைவரும் தமது அரசியல் முதலீடாக பௌத்த அடிப்படைவாதம், சிங்கள் இனவாதம் என்பவற்றை அடிப்படையாக கொண்டுதான் தமது அரசியல் வியாபாரத்தை செய்கின்றார்கள்
இலங்கையில் பௌத்தமதம் அரசமதம்.பௌத்தத்தை பேணி பாதுகாக்கவேண்டியது அரசின் கடமை என சிறிமாவோ அம்மையார் அரசியல் யாப்பில் கொல்வின் ஆர்டி சில்வா மூலம் பொறித்திருக்கிறார்.
கடந்தகால ஆட்சியாளர்கள் சட்டத்திற்கு அப்பால் சென்றும் பௌத்தத்திற்கு முன்னுரிமை அளித்திருக்கிறார்கள்.தற்போது உள்ள பௌத்த குருமார்களின் நினைப்பு என்னவெனில் சட்டத்தையும் கடந்து தமது தேவையை அல்லது தமது பிடிவாதத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதே.அந்த பிடிவாதத்தின் ஒருபகுதிதான் ஞானசார தேரரை விடுவிக்க வேண்டம் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைப்பதற்கும் காரணம்.
இவ்வாறு தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன்.
ஐபிசி தமிழ் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் தற்போதைய அரசியல் கள நிலைவரம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் காணொளியில்…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

