டெங்கில் உள்ள ஒரு பள்ளியின் வகுப்பறையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு வயது மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். நேற்று இரவு 7.30 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக செபாங் காவல்துறைத் தலைவர் நோர்ஹிஸாம் பஹாமன் கூறினார்.
சம்பவ இடத்தில் முதலுதவி அளிக்கப்படுவதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட மாணவர் வகுப்பறையில் இருந்தபோது மூச்சுத்திணறலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று காலை 8 மணிக்கு புத்ராஜெயா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நோர்ஹிஸாம் கூறினார். முன்னதாக, எஸ்.கே. டெங்கில் பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவர் ஒருவர் உணவு தொண்டையில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.



