இந்தச் சூழலில், அக்டோபர் 16-ம் தேதி, பிறப்பித்த நிர்வாக உத்தரவின் மூலம், இச்சட்டத்தின்கீழ் விதிக்கப்படக்கூடிய குறிப்பிட்ட வரிகள் மற்றும் தடைகளுக்கு அதிபர் ட்ரம்ப் தற்காலிக விலக்கு அளித்தார்.
இதன் பொருளாதாரத் தாக்கத்தை முழுமையாக மதிப்பிட அடுத்த 60 நாள்கள் வரை அவகாசம் எடுத்துக்கொள்ளப்படும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை
இந்த விலக்கு, ரஷ்ய எண்ணெய் இறக்குமதி தொடர்பான அழுத்தத்தைச் சற்றே குறைத்துள்ள அதேவேளையில், இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கும் வழிவகுத்துள்ளது.
ஆசிய மண்டலத்தில் அமெரிக்காவுக்கு இந்தியாவின் முக்கியத்துவம் மற்றும் இந்தியா மாற்று எரிசக்தி ஆதாரங்களைக் கண்டறிவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவையும் இந்த முடிவில் கவனத்தில் கொள்ளப்பட்டதாக மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா வந்துள்ள வெளியுறவுச் செயலர் ரூபியோ, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
இதனால் வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
