• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல்

GenevaTimes by GenevaTimes
October 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரான்ஸில் தற்போது ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமையை உருவாக்கி, தேர்தலை நடத்தாமல் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கக்கூடும் என்ற சந்தேகம் தமக்கு உள்ளது என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

பிரான்ஸில் தற்போது இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் முக்கிய கட்டடங்களுக்குத் தீ வைக்கப்படும் சம்பவங்கள் போன்றவை இலங்கையிலும் இடம்பெறக்கூடுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த சாகர காரியவசம்,

அரகலய போராட்டம்


“இலங்கையின் கலாசாரக் கட்டமைப்புகளுக்கு அமைய, தானாகவே அவ்வாறானதொரு நிலைமை உருவாகாது. ஆனால், அவ்வாறானதொரு நிலைமையை உருவாக்குவதற்கு இந்த அரசாங்கத்தால் முடியும்.

பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல் | Plan To Create A Situation Similar In France


ஏனெனில், பெருமளவு பணம் செலவிடப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, கடந்த காலத்தில் அதேபோன்றதொரு ‘அரகலய’ போராட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னணியில் என்ன இருந்தது என்பது தெரியாமல் மக்கள் அதில் பங்கேற்றனர்.

இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்பட்டதே ‘அரகலய’.

ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி

இதற்கு முன்னர் இலங்கையில் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றதில்லை.

அத்தகையதொரு நிலைமையை உருவாக்கி, நாட்டில் சட்டத்தின் ஆட்சியைச் சீர்குலைத்து, தீவிரவாத அரசாங்கமொன்றை உருவாக்கி, அதன் ஊடாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கக்கூடும்.

பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல் | Plan To Create A Situation Similar In France



ஏனெனில், தேர்தலொன்று நடத்தப்பட்டால், இந்த அரசாங்கத்துக்கு 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே கிடைக்கும்.


பிரான்ஸில் ஏற்பட்டதைப் போன்றதொரு நிலைமை இலங்கையில் இயல்பாக உருவாகாது. ஆனால், இந்த அரசாங்கம் அவ்வாறானதொரு நிலைமையை உருவாக்கக்கூடும் என்ற சந்தேகம் எமக்கு உள்ளது” எனத் தெரிவித்தார்.   

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

புகைமூட்டம்: கோலாலம்பூர், சிலாங்கூரில் பள்ளிகள் நாளை திறக்கப்படும் வெளிப்புறச் செயல்பாடுகள் ரத்து

Next Post

சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுக்கு பவர்ஃபுல் மவுசு.. உலகின் டாப் 5 லிஸ்ட்! இந்தியா எந்த இடத்தில் தெரியுமா? | Singapore Passport Power: Top 5 Strongest Passports in the World, Where Does India Rank?

Next Post
சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுக்கு பவர்ஃபுல் மவுசு.. உலகின் டாப் 5 லிஸ்ட்! இந்தியா எந்த இடத்தில் தெரியுமா? | Singapore Passport Power: Top 5 Strongest Passports in the World, Where Does India Rank?

சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுக்கு பவர்ஃபுல் மவுசு.. உலகின் டாப் 5 லிஸ்ட்! இந்தியா எந்த இடத்தில் தெரியுமா? | Singapore Passport Power: Top 5 Strongest Passports in the World, Where Does India Rank?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin