
வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த ஆணைக்குழுவில் நேற்று திங்கட்கிழமை (19) அவர் ஆஜரான நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷ எம்.பியின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த ஆணைக்குழுவில் நேற்று திங்கட்கிழமை (19) அவர் ஆஜரான நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
அவருக்குச் சொந்தமான கல்கிசையிலுள்ள வீட்டில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் அண்மையில் திடீர் சோதனையிடப்பட்டதுடன், அங்கிருந்த பெட்டியொன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.

