Last Updated:
சாக்கடையிலிருந்து வெளியே வர மறுத்ததுடன், தனக்கு உதவ வந்த ஒரு நபரின் அருகே மிகவும் நெருக்கமாகச் சென்று அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளார் அந்த சுற்றுலாப்பயணி.
டெல்லியில் மது போதையில் சாக்கடையில் விழுந்த அமெரிக்க சுற்றுலாப் பயணியொருவர், சாக்கடையை விட்டு வெளியே வர மறுத்து அடம்பிடித்துள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சம்பவத்தின்படி டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள திறந்தவெளி கழிவுநீர் கால்வாயில், மதுபோதையில் இருந்த அமெரிக்கப் பெண் தவறி விழுந்துள்ளார். அவர் சேற்றில் தவிப்பதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவரை மீட்க முயன்றனர். பொதுமக்கள் அவருக்கு உதவ முயன்றபோது, அவர் நிதானமில்லாமல் நடந்துகொண்டார்.
A female tourist from US was caught in an inebriated condition in the Delhi-Jaipur National Highway refusing to take help of locals. She was almost kissing the man trying to help her. https://t.co/rnb3xF00De
— Lord Immy Kant (@KantInEastt) October 18, 2026
உதவிகளை மறுத்ததோடு, ஆங்கிலத்தில் தகாத வார்த்தைகளால் கத்தினார். மேலும், தனக்கு உதவ வந்த ஒரு நபரின் அருகே மிகவும் நெருக்கமாகச் சென்று அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டார். இதனால், சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அவரது எதிர்ப்பை மீறி, பொதுமக்கள் ஆட்டோ மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். லேசான காயங்களுக்கு சிகிச்சை பெற்றதை அடுத்து, காவல்துறை உதவியுடன் அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.


