நாட்டில் இன்று (19) முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நான்கு மண்டலங்களில் (Zones) தலா ஒரு மணி நேர மின்வெட்டைச் செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு தேசிய அமைப்பு இயங்குநர் (National System Operator – NSO), இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) மற்றும் சக்தி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்றிலிருந்து தொடங்கும் இந்த மூன்று நாள் காலத்தில், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப்பகுதிக்குள் இந்த ஒரு மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தேசிய அமைப்பு இயங்குநரின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

