படுகொலை செய்யப்பட்ட ஐ.பி.சி தமிழின் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26ஆவது நினைவு தினமும், படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் ஊடகப் பணியாளர்களின் நினைவு தினமும் இன்று ஐபிசி தமிழின் யாழ்ப்பாண கலையகத்தில் நினைவுகூரப்பட்டது.
ஐபிசி தமிழின் ஊழியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் உணர்வுபூர்வமான நினைவேந்தல் இடம்பெற்றது.
நிமலராஜனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.









| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
You may like this

