மலாக்கா மாநில ஜசெக கட்சியின் தலைவராக கூ போ தியோங் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடப்பு தலைவர் தே கொக் கியூ தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவர் இந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார்.
நேற்றிரவு நடைபெற்ற மலாக்கா மாநில ஜசெக செயற்குழு கூட்டத்தில் தாம் தலைவராக ஒருமனதாக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
இடைக்கால நிர்வாகியாக தாம் செயல்படுவேன் என்றும், மாநில தலைமைக்கான தேர்தல் இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் என்றும் அவர் சொன்னார்.


