Last Updated:
மகாராஷ்டிராவில் நடிகர் டைகர் ஷொராஃப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் உள்துறை அமைச்சரை நோக்கி எம்பி சுப்ரியா சுலே கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மேற்கு புறநகர் பகுதியில் புஷ்பா பூங்காவின் அருகே பிரபல பாலிவூட் நடிகர் டைகர் ஷொராஃப் நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக அப்பகுதி விரைந்த ஜூஹு காவல்துறையினர், நடிகர் டைகர் ஷொராஃபையும், அவரது கார் ஓட்டுநரையும் அங்கிருந்து மீட்டுள்ளனர். தொடர்ந்து நடிகர் டைகர் ஷொராஃப் மற்றும் அவரது கார் ஓட்டுநர் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து ஜூஹு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், நடிகர் ஷொராஃப் புஷ்பா பூங்கா அருகே தனது காரைவிட்டு கீழே இறங்கியதாகவும், அப்போது அவரை பார்க்க அதிக அளவிலான மக்கள் கூடினர் என்றும், அந்தக் கூட்டத்தில் இருந்தே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தகவல் சொல்லியுள்ளது.
மேலும், இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாகவும், இந்தத் தாக்குதலில் நடிகர் டைகர் ஷொராஃப்க்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை எனவும், அவரது கார் ஓட்டுநருக்கு மட்டும் இடது கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருப்பதாகவும் காவல்துறை தகவல் சொல்லியுள்ளது.
பிரபல நடிகர் டைகர் ஷொராஃப் நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பில் மூழ்கியுள்ளது. இந்தச் சம்பவத்தை அறிந்த மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், உடனடியாக மும்பை காவல் ஆணையரைத் தொடர்புகொண்டு, இந்தச் சம்பவம் குறித்து விரைவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டிருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சரத் பவார் என்சிபி எம்.பி. சுப்ரியா சுலே, “பாராமதி மற்றும் மும்பை ஆகிய இரண்டு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. மக்கள் மீது இத்தகைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழும் சூழலில், மாநிலத்தில் உண்மையில் என்னதான் நடக்கிறது? இதற்கு உள்துறை அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும்.
Beed | Firing incident involving actor Tiger Shroff | NCP-SP leader Supriya Sule says, “Such incidents have taken place at two locations, one in Baramati and the other in Mumbai. With shootings taking place like this on people, what exactly is happening in the state? Home Ministry has to give the answer to it. An MLA from a party that is part of the ruling alliance has been repeatedly demanding justice for his father. His father, Baba Siddiqui, was also murdered in a similar manner by being shot dead. It’s been more than two years now. What exactly is the Home Minister doing? The same party is in power in both Maharashtra and at the Centre. Data from the Union Home Minister Amit Shah’s own department shows that crime has increased in the country. Pune ranks fifth in the country and first in Maharashtra in terms of crime, and this is not my data; it is the data provided by the Central Government itself. Maharashtra has never witnessed such a situation before”
(Pic Source: Supriya Sule Media team)— ANI (@ANI) October 18, 2026
ஆளும் கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், தனது தந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவரது தந்தையான பாபா சித்திக்கும் இதே போன்ற முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்போது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. உள்துறை அமைச்சர் உண்மையில் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்?
மகாராஷ்டிராவிலும் மத்தியிலும் ஒரே கட்சியே ஆட்சியில் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த அமைச்சகத்தின் தரவுகளே, நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன. குற்றச் செயல்களைப் பொறுத்தவரை, புனே நகரம் நாட்டில் ஐந்தாவது இடத்திலும், மகாராஷ்டிராவில் முதலிடத்திலும் உள்ளது. இது நான் சொல்லும் புள்ளிவிவரம் அல்ல; மத்திய அரசே வழங்கிய தரவு இது. மகாராஷ்டிரம் இதற்கு முன்பு ஒருபோதும் இத்தகைய சூழலை எதிர்கொண்டதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.


