Last Updated:
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு எரிபொருள் இறக்குமதியில் சற்று நிவாரணம் கிடைத்துள்ளது.
ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருந்த விரிவான பொருளாதாரத் தடைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளதால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் சற்று நிம்மதியடைந்துள்ளன.
உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டத்தை அண்மையில் கொண்டுவந்தது. அதன்படி, ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை அமெரிக்கா இறக்குமதி வரி விதிக்க வழிவகை செய்யப்பட்டது.
இந்தச் சூழலில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், கஞ்சா எண்ணெய் இறக்குமதி குறைந்ததால் அங்கு டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் உள்நாட்டு பொருளாதாரத்தில் எதிரொலிப்பதாக கூறப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு ரஷ்யாவிடம் இருந்து கஞ்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் வகையில் அந்நாட்டுக்கான பொருளாதார தடையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் சரக்கு போக்குவரத்து எரிபொருள் செலவைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கவும், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா மீதான தடைகளையும், சுங்க வரிகளையும் அமெரிக்கா தளர்த்தியுள்ளதால் அந்நாட்டில் இருந்து 45 சதவீதம் கஞ்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியுள்ள இந்தியாவுக்கு சற்று நிவாரணம் கிடைத்துள்ளது.

