60 ஆண்டுகள் வரை சேமிக்க இயலாதவர்கள், 30 ஆண்டுகள் வரையிலும் இத்திட்டத்தில் சேமிக்க முடியும். மாதம் ரூ.1,000 வீதம் 30 ஆண்டுகள் சேமித்தால், இறுதியில் ரூ.62 லட்சத்திற்கும் அதிகமான நிதி சேரும். இதில் 60 சதவீதத் தொகையை ஒரே நேரத்தில் ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளலாம். மீதமுள்ள 40 சதவீதத் தொகை ஓய்வூதிய நிதியாக மாற்றப்பட்டு, மாதந்தோறும் ரூ.12 ஆயிரத்திற்கும் மேல் ஓய்வூதியமாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.


