Last Updated:
வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ளன. இவற்றில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது மற்றும் இறுதி போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. மழை அச்சுறுத்தல் காணப்படுவதால் போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் இழந்திருந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ளன. இவற்றில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. இந்நிலையில் இன்று 5 ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
போட்டிக்கு முன்பாக மைதானத்தில் தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து வருவதால் திட்டமிட்டபடி போட்டி தொடங்குமா என்கிற கவலையில் ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும்.
இதனால் போட்டியின் சுவாரசியம் குறையக் கூடும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.


