• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காலையில் இந்த 5 பழக்கங்கள் இருந்தா உடனே நிறுத்துங்க: சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என டாக்டர் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
காலையில் இந்த 5 பழக்கங்கள் இருந்தா உடனே நிறுத்துங்க: சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என டாக்டர் எச்சரிக்கை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திகள்
/
லைஃப்ஸ்டைல்
/
காலையில் இந்த 5 பழக்கங்கள் இருந்தா உடனே நிறுத்துங்க: சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என டாக்டர் எச்சரிக்கை

சிறுநீரக மருத்துவர் வெங்கட்சுப்ரமணியம் பகிர்ந்த 5 காலைப் பழக்கங்கள் சிறுநீரகங்களை பாதிக்கும் என எச்சரித்துள்ளார், காலையில் தண்ணீர் குடிப்பது முதல் காலை உணவு வரை அவசியமான பழக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன.


காலையில் எழுந்ததும் நாம் மேற்கொள்ளும் பழக்கங்கள் நமது உடல் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு நாள் சிறப்பாக இருப்பதும் சரி, மோசமாக இருப்பதும் சரி, அது அன்றைய தினத்தில் காலையில் எழுந்ததும் நாம் மேற்கொண்ட பழக்கங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, நமது காலைப் பழக்கங்கள் அன்றைய தினத்தை மட்டும் தீர்மானிப்பதோடு, நமது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது பலருக்குத் தெரியாது.

சிறுநீரக மருத்துவரான டாக்டர் வெங்கட்சுப்ரமணியம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுநீரகங்களைப் பாதிக்கக்கூடிய ஐந்து காலைப் பழக்கங்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார். இந்தப் பழக்கங்களை ஒருவர் கொண்டிருந்தால், அவற்றை உடனே தவிர்க்குமாறு அவர் கூறியுள்ளார்.

சிறுநீரகங்கள் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க இரவு முழுவதும் உழைக்கின்றன, எனவே அவற்றின் வேலையைக் கடினமாக்கி நாளைத் தொடங்கக்கூடாது என்றும், காலைப் பழக்கத்தில் செய்யும் சிறு மாற்றங்கள் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சிறுநீரகங்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கை வகிக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவதாக, காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்காமல் இருப்பவர்களை டாக்டர் எச்சரிக்கிறார். இரவு முழுவதும் லேசான நீர்ச்சத்துக் குறைபாட்டுக்குப் பின், உடலும் சிறுநீரகங்களும் தண்ணீரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையில் காபி அல்லது டீயைக் குடிப்பதற்குப் பதிலாக, ஒரு டம்ளர் நீரைக் குடித்து தினத்தைத் தொடங்குங்கள் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

இரண்டாவதாக, காலையில் எழுந்தவுடன் நீண்ட நேரம் சிறுநீரை அடக்காமல், உடனே சிறுநீர்ப்பையைக் காலி செய்ய வேண்டும் என்று டாக்டர் எச்சரித்துள்ளார். இரவு முழுவதும் சிறுநீரை அடக்கி வைப்பதால், நமது சிறுநீர்ப்பை ஏற்கனவே விரிவடைந்து, சிறுநீரை வெளியேற்றுவதற்காகக் காத்திருக்கும். எனவே காலையில் மட்டுமின்றி, நாள் முழுவதும் சிறுநீரை அடக்கக்கூடாது என்று சிறுநீரக மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

மூன்றாவதாக, காலையில் எழுந்ததும் எவ்வளவு தான் தலைவலியாக இருந்தாலும் வெறும் வயிற்றில் வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டாம் என்று சிறுநீரக மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். வலி நிவாரணி மாத்திரைகளை அளவாக எடுக்காவிட்டால், பின்னர் அவை சிறுநீரகங்களைப் பாதித்துவிடும். அதுவும் வெறும் வயிற்றில் எடுத்தால், பாதிப்பு இன்னும் தீவிரமாக இருக்கும் என்று டாக்டர் கூறியுள்ளார்.

நான்காவதாக, காலையில் எழுந்ததும் உடற்பயிற்சியுடன் நாளைத் தொடங்குவது மிகவும் நல்லது. ஆனால் கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு நீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரகங்களுக்குத் தீங்கை விளைவிக்கும். எனவே தினத்தைச் சிறப்பாகத் தொடங்க உடற்பயிற்சி சிறந்த வழியாக இருந்தாலும், அதற்குப் பின் நீரை அதிகம் அருந்துவதும் முக்கியம் என்று டாக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

ஐந்தாவதாக, காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்று டாக்டர் வெங்கட்சுப்ரமணியம் அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய அவசரமான மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையினால், காலையில் சாப்பிடுவதை நிறைய பேர் மறந்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு தினத்தை நல்ல புரோட்டீன் நிறைந்த உணவுகளுடன் தொடங்கும்போது, அது உடலுக்கு நன்மை பயக்கும் என்று டாக்டர் கூறியுள்ளார். முக்கியமாகக் காலை உணவைத் தவிர்த்தால், ஜங்க் உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும், எனவே காலை உணவை எப்போதும் தவிர்க்கக் கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

இந்த ஐந்து பழக்கங்களையும் தவிர்ப்பதன் மூலம், சிறுநீரக ஆரோக்கியத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதுகாக்க முடியும். காலையில் ஒரு டம்ளர் நீர் அருந்துவது, சிறுநீரை அடக்காமல் இருப்பது, மருந்துகளைக் கவனமாக உட்கொள்வது, உடற்பயிற்சிக்குப் பின் நீர் அருந்துவது மற்றும் காலை உணவைத் தவிர்க்காதது ஆகியவை எளிய பழக்கங்களாக இருந்தாலும், அவை நீண்ட கால ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

Read More

Previous Post

சமூக ஊடகங்களில் மற்றவர்களை அவமானப்படுத்த வேண்டாம் என மன்னர் எச்சரிக்கை | Makkal Osai

Next Post

டேய் மனசாட்சியே இல்லையாடா.. 8 மாதம் போராடி நதியை சுத்தப்படுத்திய இன்ஸ்டா பிரபலத்துக்கு அடுத்த அடி | One dustbin stolen after Bittu Tabahi places near his cleaning Ajnar river

Next Post
டேய் மனசாட்சியே இல்லையாடா.. 8 மாதம் போராடி நதியை சுத்தப்படுத்திய இன்ஸ்டா பிரபலத்துக்கு அடுத்த அடி | One dustbin stolen after Bittu Tabahi places near his cleaning Ajnar river

டேய் மனசாட்சியே இல்லையாடா.. 8 மாதம் போராடி நதியை சுத்தப்படுத்திய இன்ஸ்டா பிரபலத்துக்கு அடுத்த அடி | One dustbin stolen after Bittu Tabahi places near his cleaning Ajnar river

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin