இருப்பினும், இந்த அறிக்கை தயாரிக்கும்போது, புள்ளி விவரங்கள் மற்றும் பொருளாதாரக் காரணிகள் மட்டுமின்றி, ஊழியர் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கருத்துகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதன்காரணமாக, ஊதிய ஆணையம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூட்டங்களை நடத்தி, ஊழியர் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லி, பெங்களூரு, ஒடிசா, லடாக் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற இடங்களில் ஏற்கனவே கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அக்டோபர் 22 முதல் மும்பையில் அடுத்தகட்ட ஆலோசனைகள் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆணையத்தின் அறிக்கையில், ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ (fitment factor), அடிப்படை ஊதிய திருத்தம், ஓய்வூதிய முறையில் மாற்றங்கள், பணி சார்ந்த சலுகைகள் மற்றும் படிகளை மறுசீரமைத்தல் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்த பரிந்துரைகள் இடம்பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக, ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ எந்த அளவில் தீர்மானிக்கப்படும் என்பதில் ஊழியர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்; ஏனெனில், இதுவே புதிய ஊதியக் கட்டமைப்பிற்கான அடித்தளமாக அமையும்.


