சொத்து வாரிசுரிமை மூலம் பெறப்பட்டிருந்தால் என்னவாகும்? பிரபுநாத்தின் மனைவி அல்லது மகள், அவரது சுய சம்பாத்திய சொத்துகள் மற்றும் பூர்வீகச் சொத்துகள் தவிர, வேறு யாரிடமிருந்தாவது சொத்தைப் பெற்றிருந்தால், அந்தச் சொத்தை யார் பெற்றார்கள் என்பதையும், அந்த வாரிசுரிமைக்கு எந்தச் சட்டம் பொருந்தும் என்பதையும் கண்டறிவது முக்கியம். தந்தையிடம் இருந்து பெறப்படும் அனைத்துச் சொத்துகளும் ‘பூர்வீகச் சொத்து’ ஆகிவிடாது. மற்றொரு சூழலில், பிரபுநாத் உயில் எழுதாமல் இறந்துவிட்டால், வாரிசுரிமை என்பது அந்தச் சட்டத்தின் 8 மற்றும் 10-வது பிரிவுகளின்படி தீர்மானிக்கப்படும். இத்தகைய சூழலில், வாரிசுகளின் முதல் வரிசையில் இறந்தவரின் மனைவி, மகன், மகள் மற்றும் தாய் ஆகியோர் இடம்பெறுவர். இதன்படி, சொத்து இந்த நால்வருக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படும். உதாரணமாக, பிரபுநாத்திடம் ₹60 லட்சம் மதிப்புள்ள சுய சம்பாத்திய சொத்து இருந்தால், அவரது மனைவி, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய ஒவ்வொருவருக்கும் தலா ₹15 லட்சம் மதிப்புள்ள சொத்து கிடைக்கும்.


