• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

IDBI வங்கியை விலைக்கு வாங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்.. சும்மா இல்ல ரூ.52,000 கோடி டீல்..!! | IDBI Bank Privatisation: Fairfax, Led by IIT Madras Alumnus Prem Watsa, to Buy 60.72% Stake for ₹52,878 Crore

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
IDBI வங்கியை விலைக்கு வாங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்.. சும்மா இல்ல ரூ.52,000 கோடி டீல்..!! | IDBI Bank Privatisation: Fairfax, Led by IIT Madras Alumnus Prem Watsa, to Buy 60.72% Stake for ₹52,878 Crore
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


IDBI வங்கியை விலைக்கு வாங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்.. சும்மா இல்ல ரூ.52,000 கோடி டீல்..!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு பெரிய பரிசு கிடைத்திருக்கிறது. ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை ‘ஃபேர்ஃபேக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ்’ (Fairfax Financial Holdings) நிறுவனம் வாங்க முன் வந்துள்ளது.

கனடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபேர்ஃபேக்ஸ் நிதி நிறுவனம், மொத்தமாக 52,878 கோடி ரூபாயை கொடுத்து ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் முழுமையாக நிறைவடையும் பட்சத்தில், இது இந்தியாவின் நிதித்துறையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீடாக அமையும்.

IDBI வங்கியை விலைக்கு வாங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்.. சும்மா இல்ல ரூ.52,000 கோடி டீல்..!!

இதன்படி மத்திய அரசு மற்றும் எல்.ஐ.சி நிறுவனம் தன் வசம் உள்ள பங்குகளை விற்பனை செய்கிறது. மத்திய அரசு தனது வசம் உள்ள 30.48% பங்குகளை விற்கிறது. எல் ஐ சி தனது வசம் உள்ள 30.24% பங்குகளை விற்கிறது. இரண்டும் சேர்த்து 60.72% பங்குகள் விற்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் 52,878 கோடி ரூபாயாகும். ஒரு பங்கின் விலை 81 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு விற்பனை மூலம் மத்திய அரசுக்கும் எல்.ஐ.சி நிறுவனத்திற்கும் மிகப்பெரிய அளவிலான நிதி வருவாய் கிடைக்கும்.

இந்த பங்குகள் விற்பனை முழுமையாக முடிந்த பிறகு, மத்திய அரசும் எல்.ஐ.சி நிறுவனமும் ஐடிபிஐ வங்கியில் சிறிய அளவிலான பங்குகளை மட்டுமே வைத்து கொள்ளும். அதாவது மத்திய அரசு 15% பங்குகளை தொடர்ந்து வைத்திருக்கும். எல்ஐசி 19% பங்குகளை தக்க வைத்துக் கொள்ளும். அதுமட்டுமில்லாமல் மத்திய அரசு தனது வசம் எஞ்சியுள்ள 15 % பங்குகளையும் எதிர்காலத்தில் Open Market மூலமாக விற்று வெளியேற CCEA ஒப்புதல் அளித்துள்ளது.

மோசமான கடன் மற்றும் பலவீனமான நிதி நிலை காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஐடிபிஐ வங்கியின் மீது உடனடி திருத்த நடவடிக்கை (PCA) விதியை அமல்படுத்தியது. இதன்பின்னர் 2019இல் எல்ஐசி நிறுவனம் வங்கியின் பெரும்பான்மை பங்குகளை கைப்பற்றி, அதன் முதன்மை பங்குதாரராக மாறியது. பின்னர் ஐடிபிஐ வங்கியை PCA விதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து ஆர்பிஐ விடுவித்தது. இதன் பின்னர் தான் இதனை தனியார் மயமாக்கும் பணிகள் தொடங்கின.

இதில் ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டியதில் அந்த நிறுவனத்தின் வசம் ஐடிபிஐ வங்கி செல்ல உள்ளது. ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனத்தின் இந்த ஒப்பந்தத்திற்கு காரணமாக இருப்பவர் பிரேம் வாட்சா. இவர் இந்தியாவில் பிறந்து பின்னர் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்த ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர்.

பிரேம் வாட்சா 1950 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்தார். அவர் சென்னை ஐஐடி-யில் வேதியியல் பொறியியல் படிப்பை முடித்தார். 1972 ஆம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்த அவர், பின்னர் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் ரிச்சர்ட் ஐவி வணிகப் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றார். 1985 ஆம் ஆண்டு பிரேம் வாட்சா ‘ஃபேர்ஃபேக் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல்வேறு பங்குச் சந்தைகள் மற்றும் துறைகளில் முதலீடுகளை செய்து வருகிறது.

இந்தியா மீது அதிக ஈடுபாடு கொண்ட பிரேம் வாட்சா தலைமையிலான ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் நிதி சேவைகள் மற்றும் பிற வணிக துறைகளில் கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. 100க்கும் அதிகமான நாடுகளீல் முதலீடு செய்துள்ள ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனம் 109.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டதாக உள்ளது.

Share This Article

English summary

IDBI Bank Privatisation: Fairfax, Led by IIT Madras Alumnus Prem Watsa, to Buy 60.72% Stake for ₹52,878 Crore

IDBI வங்கியை வாங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்.. மத்திய அரசுக்கு ரூ.52,000 கோடி வருமானம்..!! / The Centre has approved the sale of a 60.72% stake in IDBI Bank to Fairfax Financial Holdings’ subsidiary, 10955230 Canada Inc., for ₹52,878.08 crore at ₹81 per share. The government will sell its 30.48% holding and LIC its 30.24% stake, while retaining 15% and 19% respectively.

Story first published: Thursday, October 15, 2026, 13:25 [IST]

Other articles published on Oct 15, 2026

Read More

Previous Post

சீனா – வடகொரியா இடையே புதிய பாலம் திறப்பு

Next Post

பள்ளி மண்டபத்தில் ஐரீன் சோஃபியாவைக் கொன்றதாக படிவம் 4 மாணவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. – Malaysiakini

Next Post

பள்ளி மண்டபத்தில் ஐரீன் சோஃபியாவைக் கொன்றதாக படிவம் 4 மாணவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin